
த்ரிஷ்யம், பெங்களூர் டேய்ஸ் படத்திற்கு பின் மலையாள சினிமாவில் 100வது நாளை தொட்டு சாதனை படைத்துள்ளது பிரேமம்.
மேலும் கேரளாவை தாண்டி சென்னையிலும் ஈகா, எஸ்கேப், மாயாஜால் என மூன்று தியேட்டர்களில் இந்தப்படம் 100 நாட்களை தொட்டு இன்னும் ஓடிக்கொண்டுள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும் இந்த மாயாஜாலத்தை பார்த்து வியந்துள்ளனர்.
படத்தின் ஹீரோவாக நடித்த நிவின்பாலி, மூன்று கதாநாயகிகளான சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் நகைச்சுவைக்கு வினய்போர்ட் என பலரும் இந்தப்படத்தின் வெற்றிக்கு தூணாக நின்றனர்.
இத்தனை புதுமுகங்களா என மலைக்க வைக்கும் வகையில் 17 பேரை அறிமுகப்படுத்தி, இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு அழகான காதல் காவியத்தை தந்திருந்தார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.
இந்தப்படம் வெளியான மூன்றாம் நாளே படத்தின் சென்சார் காப்பி ஆன்லைனில் லீக்காகி தயாரிப்பாளர் அன்வர் ரஷீத்தை நிலைகுலைய வைத்தாலும், ரசிகர்கள் படத்தின் மீது வைத்திருந்த மரியாதையால் தான் இன்று 100வது நாளை இந்தப்படத்தால் வெற்றிகரமாக தொட முடிந்துள்ளது.
Post your comment