ஷூட்டிங் போக வருங்கால மனைவியிடம் சண்டைபோட்ட நடிகர்..!

Bookmark and Share

ஷூட்டிங் போக வருங்கால மனைவியிடம் சண்டைபோட்ட நடிகர்..!

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தில் நடித்த ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமான பாராட்டை பெற்று வருகிறார்கள்.. படத்தில் நிவின் பாலியின் கல்லூரி லெக்சரராக நடித்து கலகலப்பூட்டியவர் நடிகர் வினய் போர்ட்.

இந்தப்படத்தில் தன்னுடன் வேலைபார்க்கும் தமிழ் பேராசிரியையான சாய் பல்லவியை ஒரு தலையாக காதலித்துக்கொண்டு, அதை அவரிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் கேரக்டரில் பிரமாதப்படுத்தியிருந்தார்..  

இந்த காதலை எப்படி சொல்வது என ட்ரெய்னிங் எடுப்பதற்காகவே உடன் வேலைபார்க்கும் உடற்பயிற்சி ஆசிரியருக்கு டிபன் எல்லாம் வாங்கித்தந்து கூடவே வைத்துக்கொண்டிருக்கும் இவரது காமெடி சூப்பராக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

அதுமட்டுமல்ல, கம்ப்யூட்டர் கிளாஸ் எடுக்கும் இவர், புத்தகத்தை பார்த்து அதை அப்படியே வாசித்துவிட்டு பாடம் எடுப்பது, இன்றைய பல ஆசிரியர்கள் என்ன செய்து வருகிறார்களோ அதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக இருந்தது..  

அதிலும் மாணவர்களுக்கு அவர் 'ஜாவா' கிளாஸ் எடுக்கும் காட்சி சூப்பர். இந்த காட்சிகளில் நடிக்கவேண்டிய படப்படிப்பு தினத்தன்றுதான் வினய் போர்ட்டின் நிச்சயதார்த்தமும் நடைபெற்றதாம்.

தனது வருங்கால மனைவி சௌம்யா ரவியிடம் அடம்பிடித்து, சண்டைபோட்டு கொஞ்ச நேரம் பெர்மிஷன் வாங்கிக்கொண்டு, அதன்பின் இந்தக்காட்சிகளில் நடித்துக்கொடுத்துவிட்டு வந்தாராம் வினய் போர்ட். கடந்த டிசம்பர் மாதம் இவர்கள் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
என்னை மலையாளினு சொல்லாதீங்க ப்ளீஸ், கடுப்பான மலர் டீச்சர்.!
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்களா?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
மலர் டீச்சரை புகழ்ந்த பாலிவுட் நடிகர்- நன்றி கூறிய நடிகை
காதலர்களுக்காக மீண்டும் பிரேமம்! எத்தனை நாட்கள் தெரியுமா?
விக்ரமின் ஜோடியான மலர் டீச்சர்!
பிரேமம் இயக்குனருடன் இணைந்த சிம்பு
சுருதியால் பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions