சென்னையில் 200வது நாளை கடந்த பிரேமம்!

Bookmark and Share

சென்னையில் 200வது நாளை கடந்த பிரேமம்!

இன்றைய சூழலில்  தமிழில் வெளியாகும் சூப்பர்ஹிட் படங்களே 50 நாளை தாண்டிவது கடினமாக உள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதம் மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் சென்னை சத்யம் தியேட்டரில் 200வது நாளை வெற்றிகரமாக கடந்துள்ளது.

ஆனால் நம்ம தமிழ்ப்படங்கள் மாதிரி இந்தப்படத்தை வலுக்கட்டாயமாக ஒட்டவில்லை. வலுவாக இருந்ததால் அதுவாகவே ஓடியது.  

இத்தனைக்கும் இந்தப்படம் வெளியான மூன்றாம் நாளே படத்தின் சென்சார் காப்பி ஆன்லைனில் லீக்காகியும் கூட ரசிகர்கள் படத்தின் மீது வைத்திருந்த மரியாதையால் தான் இன்று 200வது நாளை இந்தப்படத்தால் வெற்றிகரமாக தொட முடிந்திருக்கிறது. 

படத்தின் ஹீரோவாக நடித்த நிவின்பாலி, மூன்று கதாநாயகிகளான சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் நகைச்சுவைக்கு வினய்போர்ட் என பலரும் இந்தப்படத்தின் வெற்றிக்கு தூணாக நின்றனர். இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு அழகான காதல் காவியத்தை தந்திருந்தார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். 

படம் 6௦ கோடிக்கு மேல் வசூல் செய்து மலையாள சினிமாவின் இரண்டாவது அதிக வசூல் படம் என்கிற சாதனையையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது. இத்தனைக்கும் மேலாக தெலுங்கிலும் தமிழிலும் ரீமேக் ஆகிறது. 


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
என்னை மலையாளினு சொல்லாதீங்க ப்ளீஸ், கடுப்பான மலர் டீச்சர்.!
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்களா?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
மலர் டீச்சரை புகழ்ந்த பாலிவுட் நடிகர்- நன்றி கூறிய நடிகை
காதலர்களுக்காக மீண்டும் பிரேமம்! எத்தனை நாட்கள் தெரியுமா?
விக்ரமின் ஜோடியான மலர் டீச்சர்!
பிரேமம் இயக்குனருடன் இணைந்த சிம்பு
சுருதியால் பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions