சென்னையில் மீண்டும் ரீஎண்டரி ஆகும் பிரேமம்

Bookmark and Share

சென்னையில் மீண்டும் ரீஎண்டரி ஆகும் பிரேமம்

நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் மே 29-ம் தேதி வெளியான மலையாள படம் பிரேமம். இப்படம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளியானது. காதல் கதையம்சம் கொண்ட இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டானது. மலையாள மொழியிலேயே இப்படம் தமிழ்நாட்டில் வெளியானது.

இங்கேயும் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக சென்னையில் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது.

தொடர்ந்து 230 நாட்களாக ஓடிய இப்படம் பொங்கல் தினத்தன்று ‘கதகளி’, ‘தாரை தப்பட்டை’, ‘கெத்து’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் வெளியானதால் ‘பிரேமம்’ படம் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டது.

தற்போது மீண்டும் இப்படம் திரையிடப்படுகிறது. இதனால் பிரேமம் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் இப்படம் அதிகம் வரவேற்பு பெற்று வருவதால் சென்னை வாசிகளின் அன்புக்கு மிகவும் நன்றி என்று இப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியிருக்கிறார்.


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
என்னை மலையாளினு சொல்லாதீங்க ப்ளீஸ், கடுப்பான மலர் டீச்சர்.!
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்களா?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
மலர் டீச்சரை புகழ்ந்த பாலிவுட் நடிகர்- நன்றி கூறிய நடிகை
காதலர்களுக்காக மீண்டும் பிரேமம்! எத்தனை நாட்கள் தெரியுமா?
விக்ரமின் ஜோடியான மலர் டீச்சர்!
பிரேமம் இயக்குனருடன் இணைந்த சிம்பு
சுருதியால் பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions