அல்போன்ஸ் புத்திரன் படத்தில் 17 புதுமுகங்கள்..!

Bookmark and Share

அல்போன்ஸ் புத்திரன் படத்தில் 17 புதுமுகங்கள்..!

சில இயக்குனர்கள் அப்படித்தான் ஒன்றோ இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்துவிடுவார்கள்.. ஆனால் அந்த வெற்றியை வைத்து அவசர அவசரமாக அறுவடை செய்ய நினைக்க மாட்டார்கள்.. இதோ, நம்ம வெற்றிமாறன் 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' படத்தை தொடர்ந்து இன்னும் அடுத்த படத்தை கொடுக்கவில்லையே..

அதுபோலத்தான் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனும்.. தமிழிலும் மலையாளத்திலும் 'நேரம்' என சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த கையோடு கடந்த மூன்று வருடங்களாக அமைதியாகிவிட்டவர், இப்போது தான் 'பிரேமம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்..இந்தப்படத்திலும் நிவின் பாலி தான் ஹீரோ.

ஏற்கனவே நஸ்ரியா என்கிற அழகு தேவதையை தனது முதல் படத்தில் அறிமுகப்படுத்திய அல்போன்ஸ், தற்போது அவர் திருமணம் செய்துகொண்டு ஒதுங்கியதால், அந்த இழப்பை ஈடுகட்டும் விதமாக, கோட்டயத்தை சேர்ந்த அனுபமா பரமேஸ்வரன் என்கிற புதுமுகத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இன்னொரு ஆச்சர்யம்.. படத்தில் இவருடன் சேர்த்து மொத்தம் 17 புதுமுகங்கள் நடித்திருக்கிறார்களாம். அதுமட்டுமல்ல.. நேரம் படத்தில் இரண்டு பாடல்களுடன் சுருக்கமாக முடித்துக்கொண்ட அல்போன்ஸ் புத்திரன், இதில் படம் நெடுக பாடல்கள் வைத்துள்ளாராம்..

படமும் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடுமாம். 'நேரம்' படத்தை மறந்துவிடுங்கள்.. வழக்கமான எந்த ரணகளங்களையும் எதிர்பார்த்து இந்த படத்திற்கு வராதீர்கள் என முன்னெச்சரிக்கையாக  மஞ்சள் சிக்னல் போட்டுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
என்னை மலையாளினு சொல்லாதீங்க ப்ளீஸ், கடுப்பான மலர் டீச்சர்.!
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்களா?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
மலர் டீச்சரை புகழ்ந்த பாலிவுட் நடிகர்- நன்றி கூறிய நடிகை
காதலர்களுக்காக மீண்டும் பிரேமம்! எத்தனை நாட்கள் தெரியுமா?
விக்ரமின் ஜோடியான மலர் டீச்சர்!
பிரேமம் இயக்குனருடன் இணைந்த சிம்பு
சுருதியால் பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions