தமிழுக்கும் தனுஷுக்கும் செட்டாகுமா பிரேமம்!

Bookmark and Share

தமிழுக்கும் தனுஷுக்கும் செட்டாகுமா பிரேமம்!

மலையாளத்தில் ஒரு படம் ஹிட்டடித்தால் அதை உடனே தமிழுக்கு கொண்டுவந்து ரீமேக் செய்யும் போக்கு கடந்த இரண்டு வருடங்களில் அதிகரித்துள்ளது. ஆனால் அப்படி ரீமேக்காகைய சென்னையில் ஒரு நாள், ஜன்னல் ஓரம், புலிவால், அதிதி ஆகிய படங்கள் தமிழில் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறிவிட்டதுதான் இங்கே நாம் கவனிக்கவேண்டிய விஷயம்.

இப்போது கூட த்ரிஷ்யம் ரீமேக்காக கமல் நடித்துள்ள பாபநாசம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.  தவிர மலையாள சூப்பர்ஹிட்டான பெங்களூர் டேய்ஸ் படத்தை இதுவும் கடந்து போகும்; என்கிற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். இதன் கதைக்களத்தை பெங்களூருக்கு பதிலாக சிங்கப்பூராக மாற்றியிருப்பது கதைக்கு எந்த அளவுக்கு வலுசேர்க்கும் என்பது படம் வெளியானால் தான் தெரியும்.

அந்தவகையில் மலையாள சினிமாவின் சமீபத்திய பிளாக் பஸ்டரான பிரேமம் படத்தையும் தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் அதில் நிவின்பாலி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தனுஷ் விருப்பம் காட்டுவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. ஏற்கனவே சீடன் என்கிற மலையாள ரீமேக்கில் நடித்து தோல்வியை ருசித்த அனுபவம் தனுஷுக்கு உண்டு.

பிரேமம் கிட்டத்தட்ட தனுஷுக்கு ஏற்றமாதிரி கதைதான் என்றாலும் கூட அது இன்னொரு ஆட்டோகிராப் பாக மாறிவிடக்கூடிய அபாயமும் இருக்கிறது. வேண்டுமானால் தனுஷ் தனது ஆத்ம திருப்திக்காக நடிக்கலாமே தவிர, கமர்ஷியல் ஹிட்டை அதில் எதிர்பார்க்க முடியாது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions