இன்டர்நெட்டில் வெளியான பிரேமம்: மலையாள டைரக்டரிடம் போலீசார் விசாரணை

Bookmark and Share

இன்டர்நெட்டில் வெளியான பிரேமம்: மலையாள டைரக்டரிடம் போலீசார் விசாரணை

பிரபல மலையாள இளம் நடிகர் நவீன்பாலி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பிரேமம். இந்த படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே இன்டர்நெட்டில் வெளியானது. இது மலையாள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இன்டர்நெட்டில் வெளியான பட பிரதியில் 'சென்சார் காப்பி' என்ற குறியீடும் இருந்தது. சென்சார் சர்டிபிகேட் பெறுவதற்காக கொடுக்கப்பட்ட பட பிரதியில் இருந்தே திருட்டு தனமாக பதிவு செய்யப்பட்டு பிரேமம் படம் வெளியானதால் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இதுபற்றி அந்த படத்தின் தயாரிப்பாளரான அன்வர் ரஷீத், கேரள திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், அவர் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருந்தார். இதன் அடிப்படையில் திருட்டு வீடியோ தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் பிரேமம் படத்தை இயக்கிய பிரபல மலையாள டைரக்டர் அல்போன்ஸ் புத்ரனிடம் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தனர். தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதால் தான் விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாத நிலை இருப்பதாக டைரக்டர் அல்போன்ஸ் புத்ரன் பதில் அளித்திருந்தார். 

இதை தொடர்ந்து திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் ஆலுவாவில் உள்ள டைரக்டர் அல்போன்ஸ் புத்ரன் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்கள். மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த விசாரணை நடந்தது. டைரக்டர் அல்போன்ஸ் புத்ரனிடம் நடந்த விசாரணை தொடர்பான விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர். 

பிரேமம் படப்பிடிப்பின் போது, தயாரிப்பாளர் அன்வர் ரஷீத்துக்கும், டைரக்டர் அல்போன்ஸ் புத்ரனுக்கும் பட தயாரிப்பு செலவு அதிகமானதால் மோதல் ஏற்பட்டதாகவும், இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் டைரக்டர் அல்போன்ஸ் புத்ரன் உடந்தையுடன் பிரேமம் இன்டர்நெட்டில் வெளியாகி இருக்கலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கிடையில் இந்த தகவலை டைரக்டர் அல்போன்ஸ் புத்ரன் மறுத்துள்ளார். தன் மீதான இந்த குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று அவர் கூறி உள்ளார். 

இந்த நிலையில் பிரேமம் இன்டர்நெட்டில் வெளியானதால் தியேட்டர்களின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ஈடுபட்ட உண்மை குற்றவாளியை கைது செய்யக்கோரி கேரளாவில் நேற்று தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 350 தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தது.


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
என்னை மலையாளினு சொல்லாதீங்க ப்ளீஸ், கடுப்பான மலர் டீச்சர்.!
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்களா?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
மலர் டீச்சரை புகழ்ந்த பாலிவுட் நடிகர்- நன்றி கூறிய நடிகை
காதலர்களுக்காக மீண்டும் பிரேமம்! எத்தனை நாட்கள் தெரியுமா?
விக்ரமின் ஜோடியான மலர் டீச்சர்!
பிரேமம் இயக்குனருடன் இணைந்த சிம்பு
சுருதியால் பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions