விக்ரமின் ஜோடியான மலர் டீச்சர்!

Bookmark and Share

விக்ரமின் ஜோடியான மலர் டீச்சர்!

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சாய் பல்லவி.மலர் டீச்சராக தமிழ், மலையாளம் மக்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது தமிழில் விக்ரமுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதாவது விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன், சாய்பல்லவி ஆகிய மூன்று பேரிடமும் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தற்போது சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார்.

அதோடு பிரேமம் படத்தில் அவரது நடிப்பை பார்த்த விக்ரம் இந்த படத்தில் அவர் தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தாராம்.அதனால் படக்குழு சாய் பல்லவியை விக்ரமிற்கு ஜோடியாக்கி விட்டார்களாம்.மேலும் இந்த படத்தில் டைரக்டர் விஜயசந்தர் விக்ரம்-சாய் பல்லவி சம்பந்தப்பட்ட காம்பினேஷன் காட்சிகளை பிப்ரவரியில் படமாக்க முடிவு செய்துள்ளாராம்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions