2 கெட்டப், 2 ஹீரோயின்! -பிரேம்ஜி உற்சாகம்

Bookmark and Share

2 கெட்டப், 2 ஹீரோயின்! -பிரேம்ஜி உற்சாகம்

ஆரம்பத்தில் தனது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கிய படங்களில் மட்டுமே நடித்து வந்த பிரேம்ஜி, சமீபகாலமாக மற்ற டைரக்டர்களின் படங்களிலும் பரவலாக நடித்து வருகிறார்.

தற்போது மாஸ், மாங்கா, நாரதர் ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் மாங்கா படத்தில் அவரே ஹீரோவாக நடித்துள்ளார். அதோடு, இந்த படத்தில் இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடிக்கும் பிரேம்ஜிக்கு இரண்டு அழகான ஜோடிகளும் உள்ளது.

மேலும், இந்த படத்துக்கு தானே இசையும் அமைக்கிறார் பிரேம்ஜி. அது மட்டுமின்றி இந்த படத்தில் தன்னுடன் படம் முழுக்க வரும் காமெடியனாக பவர்ஸ்டார் சீனிவாசனை நடிக்க வைத்திருக்கிறார் பிரேம்ஜி.

இதுபற்றி அவர் கூறுகையில்,

நான் ஹீரோவாக நடிப்பதே சந்தோசமாக உள்ளது. ஆனால் இரண்டு வேடங்களில் நடிப்பது இன்னும் மகிழ்ச்சியான விசயமாக இருக்கிறது. அதோடு இசையமைப்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம்.

நான் இசையமைக்க வேண்டும் என்றுதான் சினிமாவுக்கே வந்தேன். ஆனால் இப்போது நான் நடிக்கிற இந்த படத்துக்கு இசையமைப்பது பெருமையாக உள்ளது. அதனால் இந்த படம் மெகா ஹிட்டாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறும் பிரேம்ஜி, சாதாரணமாக படத்துக்கு ஒரு ஹீரோயின் தான் இருப்பார்கள்.

ஆனால் இந்த படத்திலோ எனக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடித்திருப்பது எனக்கு உற்சாகமாக இருந்தது. அதனால், செம ஜாலியாக இந்த படத்தில் நடித்துள்ளேன் என்கிறார் பிரேம்ஜி.

 


Post your comment





Related News
ஜென்மத்துக்கும் கல்யாணம் நடக்காது - பிரேம்ஜியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்.!
சன்னி லியோன் என்னை பார்த்து இப்படி செஞ்சிட்டாங்க - புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.!
மெர்சல் படத்தில் விஜய் பிரேம்ஜி ஸ்டைல் செய்தாரா? - சுட்டி காட்டிய பிரேம்ஜி!
இவர் தான் என்னுடைய பிக்பாஸ் - பிரேம்ஜியை மாட்டிவிடும் பிரபல நடிகர்
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
ஆர்.கே.நகரில் கங்கை அமரன் வெற்றிக்காக வெங்கட் பிரபு, பிரேம்ஜி வகுத்துள்ள வியூகம்!
பிரபல நடிகரை கிண்டல் செய்த டிடி
ஒரு காலகட்டத்தில் எங்களுக்கு சோறு போட்டது இவன்தான் - பிரேம்ஜியின் இன்னொரு முகம்
சென்னை 28-ல் அஜித், விஜய் பாணியில் நடித்த ஜெய் – விசில் பறந்தது!
நாள் பாடல்களை திருடித்தான் இசையமைக்கிறேன் – பிரேம்ஜி ஓபன் டாக்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions