பிரேம்ஜியை கவர்ந்த பவர்ஸ்டார்!

Bookmark and Share

பிரேம்ஜியை கவர்ந்த பவர்ஸ்டார்!

பவர்ஸ்டார் சீனிவாசனின் வளர்ச்சி பல காமெடியன்களுக்கு அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. அதிலும் சிலர் அவர் நடிக்கிற படங்களில் தங்களை நடிக்க அழைத்தால் மறுத்து விடுகிறார்கள்.

காரணம், அவர் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் இரண்டொரு காட்சிகளில் வந்தாலே கைதட்டல் வாங்கி விட்டு போய் விடுகிறார். படம் முழுக்க நடிக்கும் நமக்கு கிடைக்காத வரவேற்பு அவருக்கு கிடைக்கிறது என்கிறார்களாம்.

ஆனால், பல படங்களில் காமெடியனாக நடித்துள்ள பிரேம்ஜி, நான் ஹீரோவாக நடிக்கிற படத்தில் பவர்ஸ்டார்தான் காமெடி பண்ண வேண்டும் என்று மாங்கா படத்துக்கு அவரை புக் பண்ணியிருக்கிறார்.

அதோடு, நீங்க எப்படி நடிச்சாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்லி பவர்ஸ்டாருக்கு முழுசுதந்திரம் கொடுத்து அவர் ஸ்டைலிலேயே நடிக்க வைத்திருக்கிறார் பிரேம்ஜி.

இப்படி ஒரு ஹீரோவே முன்வந்து தனக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் அந்த படத்தில் அதிக ஈடுபாடு காட்டி நடித்திருக்கிறாராம் பவர் ஸ்டார்.  அதோடு, சில படங்களில் தனது விருப்பங்களுக்கு டைரக்டர்கள் தடை போட்டதால், அப்போது செய்யத்தவறிய சில காமெடி காட்சிகளையும் இந்த படத்தில் எடுத்து விட்டுள்ள பவர், இனிமேல் தனக்கு சுதந்திரம் கொடுக்கும் டைரக்டர்களின் படங்களுக்கே கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்போகிறாராம்.

 


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions