ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பிரின்ஸ்

Bookmark and Share

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பிரின்ஸ்

பிரின்ஸ் மகேஷ் பாபுவின் ரசிகர்களுக்கு ஒரு டபுள் ட்ரீட் காத்து இருக்கின்றது.

அவர் தற்போது நடித்துள்ள ஸ்ரீமந்துடுவிற்கு பிறகு ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் ஒரு படத்தை பிரபல இயக்குனரான ஸ்ரீகாந்த் அட்டால இயக்குகிறார்.

இந்த படம் வரும் மே 31ம் தேதி பூஜை போட்டு தொடங்கப்படுகின்றது. இந்த படத்தின் முழு படப்பிடிப்பு வரும் ஜூன் அல்லது ஜூலையில் ஆரம்பிக்கின்றது. வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் பிரின்ஸ் தனது அடுத்த படத்தை தொடங்க இருக்கிறார். 

அந்த படத்தை பிரபல இயக்குனரான திரிவிக்ரம் இயக்குகிறார். ஆனால் இயக்குனர் திரிவிக்ரம் பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் இணைந்து ஒரு படம் பண்ணப்போவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அவர் அதற்கு முன்னதாக குறுகிய காலத்தில் பிரின்சுடன் இணைந்து ஒரு படம் பண்ண இருக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே அதடு  மற்றும் கலேஜா போன்ற படங்களில் இணைந்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரின்சின் ஸ்ரீகாந்த் அட்டால படம் அடுத்த பொங்கலுக்கும், திரிவிக்ரம் படம் அடுத்த சம்மருக்கும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions