ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளராக மாறும் பிருத்விராஜ்..!

Bookmark and Share

ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளராக மாறும் பிருத்விராஜ்..!

பொதுவாக பிருத்விராஜ் பத்து படங்கள் நடித்தால் அதில் மூன்று படங்களில் கட்டாயம் போலீசாகத்தான் நடிப்பார்.. ஆனால் மீதி ஏழு படங்களை விதவிதமான கேரக்டர்களுக்கு ஒதுக்கிவிடுவார்.

கடந்த வருடம் வெளியான 'தி செவன்த் டே' படத்தில் கொள்ளையடிக்கும் பணத்தை கண்டுபிடிக்கும் அதிகாரியாக நடித்திருந்தார். அதேசமயம் 'சப்தமஸ்ரீ தஸ்கரா' படத்தில் பணத்தை திட்டம்போட்டு கொள்ளையடிப்பவராக நடித்திருந்தார்.. பரிசோதனை முயற்சிகளுக்கு பிருத்விராஜ் எப்போதும் மறுப்பு தெரிவிப்பதேயில்லை..  அந்த வகையில் தற்போது அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் 'அனார்கலி' படத்தில் கூட, அவர் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரமாக, ஆழ்கடல் நீச்சல் பயிற்சி தரும் பயிற்சியாளராக நடிக்கிறார்.

'அனார்கலி' என்றதுமே காதல் காவியம் என்றெல்லாம் கற்பனையை அலையவிடாதீர்கள்.. காமெடியும் சாகசங்களும் நிறைந்த ஒரு ஜனரஞ்சகமான படம் தான். இந்தப்படத்தில் பிஜுமேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  

சாச்சி என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகிகளாக மியா மற்றும் பிரியல் கோர் இருவரும் நடிக்கிறார்கள்.. இதில் பிருத்விராஜுக்கு ஜோடி பிரியல் கோர் தான். மியா டாக்டராக நடிக்கிறார்.

இவர்கள் தவிர பாலிவுட் சீனியர் நடிகரான கபீர் பேடியுடன் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனனும் முக்கிய வேடங்களில் நடிக்க இருக்கிறார்.. ஆமிர்கானின் பிகே படத்திற்கு பாடல் எழுதிய முந்தாஷிர் தான் இந்தப்படத்திலும் பாடல்களை எழுதுகிறார். பிப்ரவரி-15ல் படப்பிடிப்பு துவங்குகிறது.  


Post your comment





Related News
புட்பால் மேட்ச்சில் கலந்துகொள்கிறார் பிருத்விராஜ்..!
மது அருந்தும் காட்சியில் நடித்த பிருதிவிராஜ் மீது வழக்கு..!
இந்தி சினிமாவின் உயரிய விருது பெற்று நடிகர் பிரித்விராஜ் சாதனை..!
பிரியாமணிக்கு சிபாரிசு செய்யும் பிருதிவிராஜ்..!
அஜீத் ஸ்டைலை பின்பற்றும் நடிகர் ப்ரித்திவிராஜ்..!
பிருத்விராஜ்க்கு ஜோடியாக களமிறங்கும் பார்வதி மேனன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions