அட்லாண்டாவில் அமெரிக்க ஆங்கிலம் கற்க முயற்சித்த பிருத்விராஜ்..!

Bookmark and Share

அட்லாண்டாவில் அமெரிக்க ஆங்கிலம் கற்க முயற்சித்த பிருத்விராஜ்..!

சமீபத்தில் பிருத்விராஜ் நடித்து மலையாளத்தில் வெளியாகியுள்ள 'இவிடே' படம் பிருத்விராஜின் புதியதொரு ஸ்டைலை வெளிக்கொண்டு வந்துள்ளதுடன் அதற்கு பாராட்டையும் பெற்றுத் தந்துள்ளது.

ஷ்யாம் பிரசாத் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் வருண் பிளாக்கி என்கிற அட்லாண்டா நாட்டு  போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் பிருத்விராஜ். இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்துவிட்டாலும் இந்த 'வருண் பிளாக்கி' கேரக்டர் தான் தனக்கு ஸ்பெஷல் என்கிறார் பிருத்விராஜ்.

இந்தப்படத்தில் பிருத்விராஜ் அட்லாண்டாவில் வசிப்பவராக நடிப்பதால் அமெரிக்க ஆங்கிலம் பேச வேண்டிய சூழ்நிலை. அதனால் தனியாக ஒருவரை டியூசன் சொல்லித்தர ஏற்பாடு செய்திருந்தார் பிருத்விராஜ்.

ஆனால் படப்பிடிப்பில் போதுமான இடைவெளி கிடைக்காத காரணத்தால் அவரால் டியூசன் படிக்கமுடியவில்லையாம். ஆனால் படத்தில் பணிபுரிந்த அமெரிக்க உதவி இயக்குனர்கள் சிலர் பிருத்விராஜுக்கு அமெரிக்க ஆங்கில பாஷையை சொல்லித்தந்ததுடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த போலீஸ் அதிகாரியான பிருத்விராஜ் அதை எப்படி இந்திய மண்வாசம் கலந்து உச்சரிக்கவேண்டும் எனவும் சொல்லித்தந்தனராம். அதுதான் பிருத்விராஜுக்கு படம் முழுவதும் உதவியாக இருந்ததாம்.


Post your comment





Related News
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
விக்ரமுக்கு வில்லனாகும் பிரித்திவிராஜ்
வாம்மா ராசாத்தி: மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையை கைதட்டி வரவேற்ற படக்குழு
படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாவனாவுக்கு ப்ரித்விராஜ் பாராட்டு
பாவானாவுக்கு ஏற்பட்ட கொடுமை- அதிரடி முடிவு எடுத்த பிருத்விராஜ்
அந்த சம்பவத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் பாவனா: காரணம் யார் தெரியுமா?
பிருத்விராஜ் படத்தில் நடிக்கும் 5 இயக்குனர்கள்..!
மீண்டும் லவ்வர் பாயாக மாறுகிறார் பிருத்விராஜ்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions