வித்தியாசமான நேரத்தில் பிருத்விராஜ் பட டிரைலர் வெளியீடு..!

Bookmark and Share

வித்தியாசமான நேரத்தில் பிருத்விராஜ் பட டிரைலர் வெளியீடு..!

டிரைலர் வெளியிடுவதில் புதுமை காட்டிவரும் இந்த நேரத்தில் அதை வெளியிடும் நேரத்திலும் கூட புதுமை செய்துள்ளார்கள் பிருத்விராஜ் நடித்துள்ள 'இவிடே' படக்குழுவினர்.

ஷ்யாம் பிரசாத் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் ஹீரோவாக, வருண் பிளாக்கி என்கிற போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் பிருத்விராஜ். ஆனால் கதை நடப்பது இங்கல்ல.. அட்லாண்டாவில்.. அங்கே வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக பிருத்வியின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

அங்குள்ள ஐ.டி நிறுவனங்களில் நடக்கும் தொடர் கொலைகளை துப்பறிந்து கண்டுபிடிக்கும் அட்லாண்டா போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் பிருத்விராஜ்.

கதாநாயகியாக பாவனா நடிக்கும் இந்தப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் 'நேரம்' புகழ் நிவின் பாலி.. இதில் அவரது கேரக்டரின் பெயர் க்ரிஷ் ஹெப்பார்.

ஆனால் அவர் வில்லனாக நடிக்கும் விஷயம் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளதாம். இந்தப்படத்தின் டிரைலரைத்தான் வரும் 1௦ஆம் தேதி காலை 1௦ மணி 1௦ நிமிடத்துக்கு (1௦:1௦:1௦) ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் டீசர் கூட ஒரு லட்சம் லைக்குகளை அள்ளியிருக்கிறது.


Post your comment





Related News
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
விக்ரமுக்கு வில்லனாகும் பிரித்திவிராஜ்
வாம்மா ராசாத்தி: மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையை கைதட்டி வரவேற்ற படக்குழு
படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாவனாவுக்கு ப்ரித்விராஜ் பாராட்டு
பாவானாவுக்கு ஏற்பட்ட கொடுமை- அதிரடி முடிவு எடுத்த பிருத்விராஜ்
அந்த சம்பவத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் பாவனா: காரணம் யார் தெரியுமா?
பிருத்விராஜ் படத்தில் நடிக்கும் 5 இயக்குனர்கள்..!
மீண்டும் லவ்வர் பாயாக மாறுகிறார் பிருத்விராஜ்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions