அட்லாண்டா போலீஸில் பிருத்விராஜுக்கு அப்பாயின்மென்ட்..!

Bookmark and Share

அட்லாண்டா போலீஸில் பிருத்விராஜுக்கு அப்பாயின்மென்ட்..!

மலையாளத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டர்களை சாசனம் எழுதிக்கொடுத்ததுபோல இப்போது அதிகமான படங்களில் போலீஸ் யூனிஃபார்ம் போடுவது பிருத்விராஜ்தான். அதற்கேற்ற மாதிரி இவருக்கும் போலீஸ் கேரக்டர் கச்சிதமாக பொருந்துகிறது.

இல்லையென்றால் 15 படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்க முடியுமா? கடந்த 2013ல் மட்டும் 'மும்பை போலீஸ் 'மெமோரிஸ்' என இரண்டு படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் பிருத்விராஜ்.

இதுதவிர சென்ற வருடம் 'செவன்த் டே', 'தமார் ' என இரண்டு படங்கள் லிஸ்ட்டில் ஏறின. கொஞ்சம் இருங்கள்.. விஷயம் இத்துடன் முடியவில்லை. தற்போது லேட்டஸ்டாக 'இவிடே' என்கிற படத்தில் யூத்புல்லான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் பிருத்விராஜ்.

இது போலீஸ் அதிகாரியாக இவர் நடிக்கும் 16வது படம்... இதில் ஸ்பெஷல் என்வென்றால் இவர் போலீஸ் அதிகாரியாக இருப்பது இங்கல்ல.. அட்லாண்டாவில்.. அங்குள்ள ஐ.டி நிறுவனங்களில் நடக்கும் தொடர்கொலைகளை துப்பறிந்து கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இங்கே இருப்பவருக்கு அங்கே எப்படி வேலை கொடுத்தார்கள் என்கிற கேள்வி எழலாம்.. அட்லாண்டாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக பிருத்வியின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்னொரு கதாநாயகனாக நிவின் பாலியும் கதாநாயகியாக பாவனாவும் நடித்துள்ளனர். இந்த இருவரின் கேரக்டர்களுக்காக முதலில் பேசப்பட்டவர்கள் பஹத் பாசிலும் நிலா உஷாவும் தான்.

பின்னர் காட்சிகள் மாற, நிவினும் பாவனாவும் உள்ளே வந்தார்கள். படத்தை இயக்குபவர் ஷியாம் பிரசாத். மலையாள சினிமாவில் இவர் ரொம்பவே முக்கியமானவர். 'அக்னி சாட்சி', 'அகலே', 'ஒரேகடல்' ஆகிய படங்களுக்காக இவர் வாங்கியிருக்கும் விருதுகளை பட்டியலிட்டால் இரண்டு ஏ4 சீட்டுகள் தேவைப்படும்.

இங்கே 'வில்லு' படத்திற்குப்பின் நயன்தாராவுக்கு ஒரு கேப் விழுந்ததே அந்த சமயத்தில் மன ஆறுதலுக்காக மலையாளத்தில் அவர் நடித்த 'எலெக்ட்ரா' படத்தை இயக்கியதும் இவர் தான். 


Post your comment





Related News
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
விக்ரமுக்கு வில்லனாகும் பிரித்திவிராஜ்
வாம்மா ராசாத்தி: மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையை கைதட்டி வரவேற்ற படக்குழு
படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாவனாவுக்கு ப்ரித்விராஜ் பாராட்டு
பாவானாவுக்கு ஏற்பட்ட கொடுமை- அதிரடி முடிவு எடுத்த பிருத்விராஜ்
அந்த சம்பவத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் பாவனா: காரணம் யார் தெரியுமா?
பிருத்விராஜ் படத்தில் நடிக்கும் 5 இயக்குனர்கள்..!
மீண்டும் லவ்வர் பாயாக மாறுகிறார் பிருத்விராஜ்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions