மேஜர் ரவியின் நன்றிக்கடன் தீர்த்த பிருத்விராஜ்..!

Bookmark and Share

மேஜர் ரவியின் நன்றிக்கடன் தீர்த்த பிருத்விராஜ்..!

காவிய காதல் நாயகியான அனார்கலியின் பெயரில் மலையாளத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.. கதாசிரியரான சாச்சி இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியிருக்கிறார்.

இதுவரை ஏற்றிராத கதாபாத்திரமாக, ஆழ்கடல் நீச்சல் பயிற்சி தரும் பயிற்சியாளராக நடிக்கிறார் பிருத்விராஜ்.. இந்தப்படத்தில் மிக முக்கியமான கடற்பாதுகாப்பு படை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் மேஜர் ரவி.  

இந்த கேரக்டருக்கு யாரை போடலாம் என இயக்குனர் யோசித்தபோது பிருத்விராஜ் தான் மேஜர் ரவியின் பெயரை பரிந்துரை செய்தாராம். சமீபத்தில் பிருத்விராஜ் ராணுவ வீரராக நடித்து மலையாளத்தில்  வெளியான 'பிக்கெட்-43' படத்தில் இவரது நடிப்பிற்கு பாராட்டுகள், குவிந்தன.

இதற்கு காரணம் அந்தபடத்தின் இயக்குனர் மேஜர் ரவிதான். அந்தவகையில் மேஜர் ரவியின் நன்றிக்கடனை தீர்த்துவிட்டார் பிருத்விராஜ். இந்தப்படத்தில் மற்றுமொரு முக்கியமான வேடத்தில் நடிகர் பிஜுமேனன் நடிக்க இருக்கிறார்.

கதாநாயகிகளாக மியா மற்றும் பிரியல் கோர் இருவரும் நடிக்கிறார்கள்.. இவர்கள் தவிர பாலிவுட் சீனியர் நடிகரான கபீர் பேடியுடன் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனனும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்..  இதன் படப்பிடிப்பு லட்சத்தீவுகளில் நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
விக்ரமுக்கு வில்லனாகும் பிரித்திவிராஜ்
வாம்மா ராசாத்தி: மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையை கைதட்டி வரவேற்ற படக்குழு
படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாவனாவுக்கு ப்ரித்விராஜ் பாராட்டு
பாவானாவுக்கு ஏற்பட்ட கொடுமை- அதிரடி முடிவு எடுத்த பிருத்விராஜ்
அந்த சம்பவத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் பாவனா: காரணம் யார் தெரியுமா?
பிருத்விராஜ் படத்தில் நடிக்கும் 5 இயக்குனர்கள்..!
மீண்டும் லவ்வர் பாயாக மாறுகிறார் பிருத்விராஜ்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions