மீண்டும் லவ்வர் பாயாக மாறுகிறார் பிருத்விராஜ்..!

Bookmark and Share

மீண்டும் லவ்வர் பாயாக மாறுகிறார் பிருத்விராஜ்..!

தொடர்ந்து காக்கி சட்டையாக மாட்டியதில், விட்டால் சுரேஷ்கோபி, விஜயகாந்த் போல கடமை உணர்வு கொண்ட இரும்பு மனிதராகவே மாறிப்போயிருப்பார் பிருத்விராஜ். அப்புறம் காதலும் அவரைவிட்டு ஓடிப்போயிருக்கும்.

நல்லவேளை காக்கிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, ரவுடி, டான் கேரக்டர்களை எல்லாம் கொஞ்ச நாள் கழித்து வாங்க என சொல்லிவிட்டு லவ்வர் பாயாக மாற முடிவெடுத்துள்ளார் பிருத்விராஜ். இவர் ஏற்கனவே நடித்துவரும் என்னு நிண்ட மொய்தீன் படம் கூட காதல் கதை தான் என்றாலும் அது ஒரு பீரியட் படம்.. அதில் கதைக்கேற்றபடிதான் காதல் பண்ண முடியும்.

ஆனால் பிரபல கதாசிரியரும் இயக்குனருமான பாபு ஜனார்த்தனன் தன்னிடம் கொண்டுவந்த முக்கோண காதல் கதையை கேட்டவர், இதுதான் காதல் ரூட் மாற சரியான தருணம் என உடனே ஒகே சொல்லிவிட்டார்.

இந்த பாபு ஜனார்த்தனன் இதுவரை பிருத்விராஜை வைத்து படம் இயக்கவில்லையே தவிர, இதற்கு முன் அதாவது பிருத்விராஜ் வளர்ந்து வந்த ஆரம்ப காலகட்டத்தில் அவர் நடித்த ஐந்து சூப்பர்ஹிட் படங்களுக்கு கதை எழுதி கொடுத்திருக்கிறார்.

அந்த நன்றியும் நட்பும் தான் இப்போது பாபு ஜனார்த்தனன் டைரக்சனில் பிருத்விராஜ் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம்.


Post your comment





Related News
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
விக்ரமுக்கு வில்லனாகும் பிரித்திவிராஜ்
வாம்மா ராசாத்தி: மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையை கைதட்டி வரவேற்ற படக்குழு
படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாவனாவுக்கு ப்ரித்விராஜ் பாராட்டு
பாவானாவுக்கு ஏற்பட்ட கொடுமை- அதிரடி முடிவு எடுத்த பிருத்விராஜ்
அந்த சம்பவத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் பாவனா: காரணம் யார் தெரியுமா?
பிருத்விராஜ் படத்தில் நடிக்கும் 5 இயக்குனர்கள்..!
பிருத்விராஜ் - ஆர்யாவின் டபுள் பேரலுக்கு என்னதான் ஆச்சு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions