இவிடே படத்திற்காக மீண்டும் பாடினர் பிருத்விராஜ்..!

Bookmark and Share

இவிடே படத்திற்காக மீண்டும் பாடினர் பிருத்விராஜ்..!

ஹீரோக்கள் எல்லாம் பாட ஆரம்பித்துவிட்ட காலகட்டம் இது.. அதற்கு  பிருத்விராஜ் மட்டும் விதிவிலக்காகி விடுவாரா என்ன..? புதிய முகம் என்கிற படத்தில் முதன்முதலாக பின்னணி பாட ஆரம்பித்த பிருத்விராஜ், அதன்பின் பாடுவதில் பெரிதாக அதில் ஆர்வம் காட்டிக்கொள்ளவில்லை..

தனது நண்பர்களான இயக்குனர்கள் சந்தோஷ் சிவன் விருப்பத்திற்காக 'உறுமி' படத்திலும், அமல் நீரத் விருப்பத்திற்காக 'அன்வர்' படத்திலும் பாடியதோடு சரி.. தற்போது 'இவிடே' படத்தில் நடித்து வருகிறார் பிருத்விராஜ்.

படத்தின் இயக்குனர் ஷியாம் பிரசாத் இந்தப்படத்திலும் நீங்கள் பாடினால் நன்றாக இருக்கும் என கோரிக்கை வைக்க, பிருத்விராஜால் மறுக்க முடியவில்லை.

ரபீக் அகமது எழுதிய வரிகளை, கோபிசுந்தரின் இசையில் அழகாக பாடிக்கொடுத்திருக்கிறார். இந்தப்படத்தில் அட்லாண்டா போலீஸ் அதிகாரியாக பிருத்விராஜ் நடிக்கிறார்.

கணவனை விவாகரத்து செய்துவிட்டு குழந்தையுடன் சாப்ட்வேர் கம்பெனியில் வேலைபார்க்கும் பெண்ணாக பாவனா நடிக்க, முக்கிய வேடத்தில் நிவின் பாலியும் நடித்துள்ளார்.


Post your comment





Related News
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
விக்ரமுக்கு வில்லனாகும் பிரித்திவிராஜ்
வாம்மா ராசாத்தி: மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையை கைதட்டி வரவேற்ற படக்குழு
படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாவனாவுக்கு ப்ரித்விராஜ் பாராட்டு
பாவானாவுக்கு ஏற்பட்ட கொடுமை- அதிரடி முடிவு எடுத்த பிருத்விராஜ்
அந்த சம்பவத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் பாவனா: காரணம் யார் தெரியுமா?
பிருத்விராஜ் படத்தில் நடிக்கும் 5 இயக்குனர்கள்..!
மீண்டும் லவ்வர் பாயாக மாறுகிறார் பிருத்விராஜ்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions