மோகன்லால் படத்தில் இருந்து பிருத்விராஜ் விலகல்..!

Bookmark and Share

மோகன்லால் படத்தில் இருந்து பிருத்விராஜ் விலகல்..!

மோகன்லாலும், பிருத்விராஜும் கூட்டணி சேர்ந்து நடிக்கும் 'கனல்' படத்தை இருவரின் ரசிகர்கள் மட்டுமல்ல, மொத்த மலையாள ரசிகர்களுமே ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

காரணம் பிருத்விராஜ் பீல்டுக்கு வந்து இந்த 12 வருடங்களில் மோகன்லாலுடன் இணைந்து ஒரு படம் கூட நடித்ததில்லை.. டுவெண்டி-20 படத்தில் மோகன்லால் ஹீரோ என்றாலும், பிருத்விராஜ் சம்பந்தமே இல்லாமல் ஒரு பாடல் காட்சியில் மட்டுமே ஆடிவிட்டு போய்விடுவார்.

எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் துவக்க திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் மே மாதம் மோகன்லால் நடிப்பதாக இருந்த ஒரு படம் திடீரென்று ட்ராப் ஆக, அந்த கால்ஷீட்டை பயன்படுத்திக்கொள்ள சொல்லி கனல் இயக்குனர் பத்மராஜிடம் சொல்லிவிட்டார் மோகன்லால்.

இயக்குனர் தயாராக இருப்பதால் அவருக்கு ஓகே தான். ஆனால் பிருத்விராஜ் இப்போது வரிசையாக படங்களில் நடித்து வருவதால் ஆகஸ்ட் மாதம் தான் தன்னால் முடியும் என கால்ஷீட் கொடுத்திருந்தார்.  

இப்போது திடீரென தேதியை மாற்றினால், அவர் நடித்துவரும் படங்களை அப்படியே பாதியில் விட்டுவிட்டு வரமுடியாது அல்லவா.? அதனால் கனத்த மனதுடன் பிருத்விராஜ் இந்தப்படத்தை விட்டு விலகுகிறார்.

ஏற்கனவே லால்ஜோஸ் இவர்கள் இருவரையும் வைத்து 'கஸின்ஸ்' என்கிற படத்தை ஆரம்பிப்பதாக இருந்து கடைசி நேரத்தில் ட்ராப் ஆனது. இனி மோகன்லாலும் பிருத்விராஜும் இணைந்து நடிப்பது என்பது ஒரு கனவு தான் என்கிறார்கள் திரையுலகை நன்கு அறிந்த இயக்குனர்கள் சிலர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions