நான் ரசிகர்களின் செல்லம் - ப்ரியா ஆனந்த்!

Bookmark and Share

நான் ரசிகர்களின் செல்லம் - ப்ரியா ஆனந்த்!

உயிர் தீட்டும் உயிலே வா, குளிர் நீக்கும் வெயிலே வா என்ற, வாலிப கவிஞர் வாலியின் பாடல் வரிகளுக்கு அழகு சேர்த்தவர் ப்ரியா ஆனந்த். கேரளாவில் இருந்தும், மும்பையில் இருந்தும் படையெடுத்து வரும் ஹீரோயின்களுக்கு மத்தியில், சிங்காரச் சென்னையில் பிறந்த தமிழச்சி.

தன் திரை அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறது, கை கால்கள் முளைத்த, 28 வயது ஹைக்கூ...ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் நடித்த அனுபவம்? ஐஸ்வர்யா, எனக்கு முன்பே பழக்கமானவங்க. அவங்க தயாரிச்ச, எதிர்நீச்சல் படத்தில் நடிச்சிருக்கேன். பெரிய இடத்து பொண்ணு என்றாலும், அலட்டிக்க மாட்டாங்க; எளிமையாக இருப்பாங்க. மற்றவர்களை சங்கடப்படுத்தக் கூடாது என, நினைப்பாங்க.

என்னை, தோழி மாதிரி பார்த்துக்கிட்டாங்க. உங்களுக்கு முன்னணி நடிகர் ஒருவர் சிபாரிசு செய்கிறாராமே?இப்படியெல்லாமா சொல்றாங்க? உண்மையில் எனக்கு யாரும் சிபாரிசு செய்யலை சார்; வாய்ப்புகள் தேடி வருது. வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏத்துக்க முடியலை; எனக்கு கதை பிடித்திருந் தால் நடிப்பேன்.

இரண்டு தயாரிப்பாளர்கள், ஒரு ஆண்டாக உங்கள், கால்ஷீட்க்கு காத்திருந்தும் நீங்கள் கண்டுக்கலையாமே? எனக்கு எதுவும் தெரியாது. யாரோ எங்கிருந்தோ குறை கூறினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நான் சினிமாவுக்கு புதுசு அல்ல; சினிமாவில் என்னவெல்லாம் பேசுவாங்க என, எனக்கு தெரியும்.

என் வழியில், தவிப்போ, தடுமாற்றமோ இல்லை. கால்ஷீட் கேட்பவர்கள் என்னிடம் நேரடியாக பேசாமல், நான் காத்திருக்க வைப்பதாக சொல்வது, சரியான அணுகுமுறை இல்லை. சில நடிகைகள் முன்னணி ஹீரோக்களோடு ஜோடியாக விழாக்களுக்கு வந்து பரபரப்பு ஏற்படுத்துவது பற்றி?ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பம் இருக்கும்.

அதுபற்றி நான் என்ன சொல்ல முடியும்? இதுபற்றி, சம்பந்தபட்டவர்களிடம் தான் கேட்க வேண்டும். உங்கள் ஹீரோக்களிடம் உங்களுக்கு பிடித்த விஷயங்கள்?  சிவகார்த்திகேயன், ஷூட்டிங் இடையே எதையாவது பேசி, அந்த இடத்தையே கலகலப்பு ஆக்கிடுவார். எல்லாரும் சிரிக்கும் போது, அவர் மட்டும் திடீர்ன்னு சிரிப்பை நிறுத்திட்டு, நல்ல பிள்ளை மாதிரி ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டில், விக்ரம் பிரபு அவருக்கான சீன் எப்படி, எப்படி நடிக்கணும்ங்கிறதுல ரொம்ப கவனமாக இருப்பார்.

எப்பவுமே அவரது பார்வை கம்பீரமா இருக்கும்; அதிகம் பேசமாட்டார். கவுதம் கார்த்திக் கலகலப்பான ஆள்; கவலை இல்லாத மனுஷன். மத்தவங்களை மரியாதையாக நடத்துவார். தமிழ் சினிமாவில், இந்த மூன்று பேருமே மிகப்பெரிய இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

கேரள, மும்பை நடிகைகளை நம்பியிருக்கும் கோலிவுட், தமிழ்பெண்ணான உங்களுக்கும் சிவப்புகம்பளம் விரித்திருப்பது பற்றி? சந்தோஷமாக இருக்கிறது. வாய்ப்புகள் தொடர்ந்து வருவதால், தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்குன்னு நினைக்கிறேன்.

முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான நல்ல சூழ்நிலைகளும் உருவாகி உள்ளன.எந்த நடிகர்களுடன் நடிக்க ஆசை? அனைத்து முன்னணிநடிகர்களுடன் நடிக்க ஆசை; குறிப்பிட்டு யாரையாவது சொல்லி, வம்பில் மாட்டி விடாதீர்கள். நல்லபடியாக சினிமாவில் வளர வேண்டும் என்றால்ரசிகர்களின் ஆதரவு முக்கியம்.

ரசிகர்கள் பற்றி? சினிமா விழாக்களுக்கு செல்லும்போது, ரசிகர்களின், ப்ளையிங் கிஸ் பறக்கும்; செல்லம்ன்னு சத்தம் வரும். அவங்கபக்கமா பார்த்து சிரித்து, கை காட்டினால்,சத்தங்கள் எகிறும். உம்மான்னு கூட குசும்பு ரசிகர்கள் கூச்சல் போடுவர். எப்போதும் ரசிகர்களின் செல்லமாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions