குத்தாட்ட வாய்ப்பை திருப்பி அனுப்பிய ப்ரியாஆனந்த்!

Bookmark and Share

குத்தாட்ட வாய்ப்பை திருப்பி அனுப்பிய ப்ரியாஆனந்த்!

அரிமா நம்பி படத்திற்கு பிறகு மேல்தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டும் என்பதுதான் ப்ரியாஆனந்தின் நோக்கமாக இருந்தது. ஆனால் அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் எதுவுமே பலனளிக்கவில்லை.

அதோடு, பின்னர் அவர் நாயகியாக நடித்து வெளியான இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை என மூன்று படங்களுமே ப்ளாப் ஆகின. அதனால், ப்ரியாஆனந்தின் மேல்தட்டு ஹீரோ கனவு கலைந்து போனது.

இப்போது படம் கிடைத்தால் போதும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்த வகையில், தெகிடி அசோக்செல்வன் நடிக்கும் கூட்டத்தில் ஒருவன் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அதோடு அரிமா நம்பி ஆனந்த் சங்கர் இயக்கும் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இந்த நேரத்தில், ஜி.வி.பிரகாஷின் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் ஏற்கனவே சிம்ரன், கயல் ஆனந்தி ஆகியோர் இருக்க, இப்போது ப்ரியாஆனந்தும் கமிட்டாகியிருக்கிறார்.

இந்த படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்கிறாராம் ப்ரியாஆனந்த். ஆனால் அதைப்பார்த்து ஒரு புதுமுக இயக்குனர் தனது படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டமாட ப்ரியாவை அழைத்தாராம்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து போன ப்ரியாஆனந்த், நான் கதாநாயகியாக நடிக்கும் படத்தில் குத்தாட்டம் ஆட தயாராக இருக்கிறேன். ஆனால் நான் நாயகியாக நடிக்காத படத்தில் அப்படி நடிக்கமாட்டேன் என்று உறுதியாக மறுத்து விட்டாராம்.


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions