ப்ரியா ஆனந்துக்கு எதிராக பாதிக்கப்பட்ட மானேஜர்கள்..!

Bookmark and Share

ப்ரியா ஆனந்துக்கு எதிராக பாதிக்கப்பட்ட மானேஜர்கள்..!

தமிழ் சினிமாவில் தற்போது ராசியில்லாத நடிகை என்ற பெயரைப் பெற்றிருப்பவர் ப்ரியா ஆனந்த். 2009 - ஆம் ஆண்டு வாமனன் என்ற படத்தில் அறிமுகமானார் ப்ரியா ஆனந்த். முதல்ப் படமான வாமனன் படம் ஓடவில்லை.

ஆனாலும், புகைப்படம், இங்கிலீஷ் விங்கிலீஷ், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை,180, அரிமா நம்பி, இரும்புக் குதிரைகள், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை என இவர் நடித்தாலும் எதிர்நீச்சல் தவிர இவர் நடித்த பல படங்கள் ஓடவே இல்லை.

ஆனாலும் ப்ரியா ஆனந்துக்கு இதுவரை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்தன. ப்ரியா ஆனந்த் கடைசியாக நடித்த வை ராஜா வை படமும் தோல்விப்படமாகிவிட்டதால் ராசியில்லாத நடிகை பட்டியலில் சேர்ந்துவிட்டார் ப்ரியா ஆனந்த்.

இது ஒரு பக்கம் இருக்க, தான் எந்தப் படத்தில் கமிட்டானாலும் அப்படத்தின் ஹீரோ உடன் நெருக்கமாகிவிடும் ப்ரியா ஆனந்த், அந்த ஹீரோவிடம் பேசி மானேஜரை மாற்றச் சொல்வதோடு தன்னுடைய மானேஜரை அவர்களுக்கு சிபாரிசு செய்கிறார்.

அதர்வா, கௌதம் கார்த்திக் ஆகியோரின் மானேஜர்களை மாற்றிய ப்ரியா ஆனந்த் அரிமா நம்பியில் நடிக்கும்போது விக்ரம் பிரபுவுக்கும் தன்னுடைய மானேஜரை சிபாரிசு செய்துள்ளார். அவர் மறுத்துவிட்டார்.

இப்படியாக மானேஜர்களின் வாழ்க்கையில் விளையாடிய ப்ரியா ஆனந்தை அவரால் பாதிக்கப்பட்ட மானேஜர்களே ராசியில்லாத நடிகை என முத்திரை குத்திவிட்டனர். எந்த கம்பெனியிலாவது ப்ரியா ஆனந்தை கதாநாயகியாக பரிசீலித்தால் குறுக்கே விழுந்து காலி பண்ணிவிடுகின்றனர்.


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions