விக்ரம் படத்தில் ப்ரியா ஆனந்த்!

Bookmark and Share

விக்ரம் படத்தில் ப்ரியா ஆனந்த்!

விக்ரம்பிரபுவுடன் நடித்த அரிமா நம்பி ப்ரியா ஆனந்துக்கு முக்கிய படமாக அமைந்தது. அதோடு அந்த படத்தில் பாரில் சரக்கு அடிப்பது போன்றும் நடித்து சர்ச்சை உருவாக்கிய ப்ரியா ஆனந்த், பார் சீன் என்பதால் அப்படி நடித்தேன்.

மற்றபடி தமிழ் கலாச்சாரத்துக்கு எந்த இழுக்கையும் நான் ஏற்படுத்திவிடவில்லை என்று அப்போதைய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் அந்த படத்திற்கு பிறகு ப்ரியாஆனந்த் நடித்த இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை,. அதனால் அதன்பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் நடித்த வை ராஜா வை படத்தில் நடித்து விட்டு அதன் ரிசல்டாவது தனக்கு சாதகமாக அமையுமா? என்று சில மாதங்களாக காத்துக்கொண்டிருக்கிறார் ப்ரியாஆனந்த்.

இந்த நிலையில், அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் அடுத்து விக்ரமை வைத்து தான் இயக்கும் படத்தில் ப்ரியா ஆனந்துக்கு 2வது நாயகி வேடம் கொடுத்துள்ளார். இதேபடத்தில் முதல் நாயகியாக காஜல்அகர்வால் நடித்தபோதும், ப்ரியாஆனந்துக்கும் விக்ரமுடன் பாடல் காட்சியெல்லாம் உள்ளதாம்.

அதனால், கிடைக்கிற வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்திக்கொண்டு முன்னுக்கு வந்து விட வேண்டும் என்று அப்படத்தில் கமிட்டாகியிருக்கும் ப்ரியாஆனந்த், மேலும் சில அபிமான டைரக்டர்களிடமும் படவேட்டை நடத்திக்கொண்டிருக்கிறார்.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions