ப்ரணிதா பாணிக்கு மாறிய ப்ரியா ஆனந்த்!

Bookmark and Share

ப்ரணிதா பாணிக்கு மாறிய ப்ரியா ஆனந்த்!

எதிர்நீச்சல், அரிமா நம்பி போன்ற படங்கள் ப்ரியாஆனந்துக்கு ஹிட் படங்களாக அமைந்தாலும், வாமனன், வணக்கம் சென்னை, இங்கிலீஷ் விங்கிலீஷ், இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை என பல படங்கள் அவருக்கு தோல்வியாக அமைந்தன.

விளைவு, அடுத்தபடியாக மேல்தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாடிவிட வேண்டும் என்ற ப்ரியாஆனந்தின் கனவு கலைந்து போனது. அவர் எடுத்த முயற்சிகள் எதுவுமே பயனற்று போனதால், தேடிவந்த வாய்ப்புகளையும் விட்டு விடக்கூடாது என்று தெகிடி அசோக் செல்வன் நடிக்கும் கூட்டத்தில் ஒருவன் படத்தில் கமிட்டாகி விட்டார்.

மேலும், இதுவரை சிங்கிள் ஹீரோயினி கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த ப்ரியாஆனந்த், இப்போது மாஸ் படத்தில் ப்ரணிதா நடிப்பது போன்று, முன்னணி ஹீரோக்களின் படங்களில் இரண்டாவது நாயகி வேடம் என்றாலும் நடிக்கத்தயாராகி விட்டாராம்.

அதனால், தனது கண்டிசனை தற்போது தளர்த்தி விட்டதாக சில இயக்குனர்களுக்கு தூது அனுப்பி வருகிறார் ப்ரியா. தன் மீது விழுந்துள்ள ராசியில்லாத நடிகை என்ற இமேஜை மாற்ற வேண்டும் என்றே இப்படி ரூட்டை மாற்றியிருக்கிறாராம் நடிகை.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions