ப்ரண்ட்லியாக பழகும் ப்ரியாஆனந்த்!

Bookmark and Share

ப்ரண்ட்லியாக பழகும் ப்ரியாஆனந்த்!

எதிர்நீச்சல் படத்துக்குப்பிறகு பேசப்படும் நடிகையானவர் ப்ரியாஆனந்த். அதன்பிறகு வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்புக்குதிரை என்று நடித்தவர் தற்போது வை ராஜா வை படத்தில் நடித்துள்ளார்.

அதோடு 2 புதிய படங்களிலும் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில், ப்ரியாஆனந்த்துக்கு சில நண்பர்களே புதிய படங்களில் நடிக்க சிபாரிசு செய்கிறார்களாம். அதோடு சிலர் தொடர்ந்து தமிழில் நடித்துக்கொண்டேயிருக்க வேண்டும்.

வேறு மொழிகளுக்கு செல்லக்கூடாது என்றும் அவரை அன்போடு கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். இந்த அளவுக்கு ப்ரியாஆனந்தை மற்றவர்கள் கேட்டுக்கொள்வதற்கு காரணம், அனைவரிடமும் அவர் மிகமிக அன்பாக பழகக்கூடியவராம்.

படப்பிடிப்பு தளங்களில் சில நடிகைகளைப் போன்று டைரக்டர், ஹீரோக்களிடம் மட்டுமே பேசிவிட்டு செல்லாமல், கீழ்மட்ட டெக்னீசியன்களாக இருந்தாலும் எல்லோரையுமே மதித்து பேசிப்பழகுவாராம் ப்ரியாஆனந்த்.

இதன்காரணமாகவே அவருக்கு பெரிய பரிட்சயம் இல்லாதவர்கள்கூட தங்களுக்கு தெரிந்த இயக்குனர்களிடம் அவர் ஒரு நல்ல நடிகை. அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறார்களாம்.  ஆக, சினிமாவில் பணத்தையும், புகழையும் சம்பாதித்தாரோ இல்லையோ, நிறைய நண்பர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார் ப்ரியாஆனந்த். 


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions