இறங்கி அடிக்கும் ப்ரியா ஆனந்த்!

Bookmark and Share

இறங்கி அடிக்கும் ப்ரியா ஆனந்த்!

அரிமா நம்பி படத்தின் வெற்றி ப்ரியா ஆனந்தின் மார்க்கெட்டில் பரபரப்பை கூட்டினாலும், அதன்பிறகு அவர் நடித்த இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய படங்களின் தோல்வி காரணமாக அவரது மார்க்கெட் ஆட்டம் கண்டது.

அதனால் ஐஸ்வர்யா தனுஷ், கடல் கெளதமை வைத்து இயக்கியுள்ள வை ராஜா வை படத்தை பெரிதாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தார் ப்ரியாஆனந்த். அதேசமயம் அந்த படத்தில் டாப்சியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் அவரால் தனக்கு பாதிப்பு ஏற்படுமோ என்கிற அச்சமும் அவருக்கு உள்ளூர இருந்து வந்தது.

அதன்காரணமாக, ஒருவேளை தனக்கு பாதகமான சூழ்நிலை வந்து விட்டால் என்ன  செய்வது  என்கிற அச்சம் காரணமாக, புதிய படங்களுக்கான தீவிர வேட்டையில் இறங்கினார் ப்ரியா ஆனந்த்.

அதோடு திரைக்குப்பின்னால் தனக்கு அறிமுகமே இல்லாத நபர்கள் படம் எடுக்கிற விசயத்தை கேள்விப்பட்டால் கூட தேடிச்சென்று சான்ஸ் கேட்டு வந்தார். விளைவு, இப்போது அரிமா நம்பி டைரக்டர் ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடிக்கும் ப்ரியாஆனந்த், தெகிடி அசோக் செல்வன் நடிக்கும் கூட்டத்தில் ஒருவன் படத்திலும் நடிக்கிறார்.

இதையடுத்தும் ஒரு படத்தில் நடிக்க கதை கேட்டிருக்கிறார் ப்ரியாஆனந்த். இந்த படங்களில் கவர்ச்சி ஏரியாவில் முன்பைவிட கொஞ்சம் கூடுதலாகவும் இறங்கி அடிக்கப்போகிறாராம் அவர்.

 


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions