அவரை கேள்வி கேட்டீர்களா, என்னை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்- கோபத்தில் பிரியதர்ஷன்

Bookmark and Share

அவரை கேள்வி கேட்டீர்களா, என்னை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்- கோபத்தில் பிரியதர்ஷன்

இவ்வருடத்திற்கான தேசிய விருதை யார் யார் வென்றார்கள் என்ற விவரம் நேற்று (ஏப்ரல் 7) வெளியாகி இருந்தது. இந்த விருது விவரம் பலருக்கு சந்தோஷத்தை கொடுத்திருந்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அக்ஷய்குமாருக்கு சிறந்த நடிகர் விருதும், சிறப்பு விருதாக மோகன்லாலுக்கு கிடைத்துள்ளது. இந்த விருது தேர்வுக் குழுவுக்கு தலைமை தாங்கியவர் பிரியதர்ஷன். இவருக்கு அக்ஷய்குமார், மோகன்லால் இருவருமே நல்ல நண்பர்களால் என்பதால் விருதுக்கு தேர்வாகி இருக்கிறார்கள் என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதுபற்றி பிரியதர்ஷன் கூறியதாவது, அக்‌ஷய்குமார் தேசிய விருதுக்கு தகுதியான நடிகர். ரஷ்டம் படத்தில் அவர் சிறப்பாகவே நடித்திருந்தார். அவரை நான் மட்டுமே தேர்வு செய்யவில்லை. என்னுடன் 38 ஜூரி உறுப்பினர்கள் இருந்தனர். எல்லோரும் சேர்ந்துதான் தேர்வு செய்தோம்.

கடந்த முறை பிரபல இயக்குனர் ரமேஷ் சிப்பி தேர்வுக்குழு தலைவராக இருந்தார். அவர் பிக்கு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அமிதாப் பச்சனுக்கு விருது அறிவித்தார். அவரிடம் கேள்வி கேட்டீர்களா? பிறகு என்னிடம் மட்டும் இந்த கேள்வியை எப்படிக் கேட்கலாம்? என பிரியதர்ஷன் கூறியிருக்கிறார்..


Post your comment





Related News
லிசி - பிரியதர்ஷனுக்கு குடும்பநல கோர்ட்டு விவாகரத்து வழங்கியது
பிரியதர்‌ஷனுடன் பயணித்த கடினமான பாதை நிறைவடைந்தது: நடிகை லிசி அறிவிப்பு
மீண்டும் பாலிவுட்டில் பிரியதர்ஷன்...
பிரியதர்ஷன், லிசி இடையே சொத்து பிரச்சினை: ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார்
நடிகை லிஸ்ஸி, இயக்குனர் பிரியதர்ஷன் விவாகரத்து!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions