பிரியதர்‌ஷனுடன் பயணித்த கடினமான பாதை நிறைவடைந்தது: நடிகை லிசி அறிவிப்பு

Bookmark and Share

பிரியதர்‌ஷனுடன் பயணித்த கடினமான பாதை நிறைவடைந்தது: நடிகை லிசி அறிவிப்பு

நடிகை லிசி-இயக்குனர் பிரியதர்‌ஷன் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு செய்து இருந்தனர். நேற்று சட்டப்படி விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகை லிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இன்று பிரியதர்‌ஷன் உடனான எனது விவாகம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டு விட்டது. இன்று சென்னையில் நாங்கள் இருவரும் அதற்கான அதிகாரப்பூர்வ படிவங்களில் இருவரும் கையெழுத்திட்டுவிட்டோம். விவாகரத்திற்காக விண்ணப்பித்து விட்டு நான் காத்திருந்த காலம் எனக்கு மிகவும் சோதனையாக அமைந்தது.

சமீப காலங்களில் ஹிரித்திக் ரோ‌ஷன்-சுசேன், திலீப்- மஞ்சு, விஜய்-அமலா பால் ஆகியோர் விவகாரத்திற்க்கு விண்ணப்பித்ததாக வந்த தகவல்கள் அறிந்து நான் அவர்களுக்காக பெரிதும் வருந்தியிருக்கிறேன்.

அது போன்ற நிகழ்வுகள் அவர்களுக்கும் மன வருத்தத்தையே அளித் திருக்கும். இருந்தும் அவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதையளித்தே பிரிந்தனர்.

ஆனால் எனது நிலையோ இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. கடுமையாக காட்டுமிராண்டி தனத்துடனேயே என்னை அணுகினார். எங்கள் விவாகரத்தே, எங்கள் வாழ்க்கை எப்படி அருவறுக்கத்தக்கதாக இருந்திருக்குமென பறை சாற்றியிருக்கும். என் வாழ்வில் கடினமான நெடிய பாதை இத்துடன் நிறைவடைந்து விட்டதாக கருதுகிறேன்.

இத்தருணத்தில் இதுபோன்ற ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி என்னுடன் இருந்த வழக்கறிஞர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். என் இரு குழந்தைகளின் காதலுக்கும், பாசத்திற்கும் என்றும் நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன். இவை அனைத்தையும் தாண்டி எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.

இவ்வாறு லிசி கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions