லிசி - பிரியதர்ஷனுக்கு குடும்பநல கோர்ட்டு விவாகரத்து வழங்கியது

Bookmark and Share

லிசி - பிரியதர்ஷனுக்கு குடும்பநல கோர்ட்டு விவாகரத்து வழங்கியது

சிறைச்சாலை உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை லிசி. பிரியதர்ஷனும், லிசியும் காதலித்து கடந்த 1990-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

ஒருவர் மீது ஒருவர் நீதி மன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஒரு வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி கே.கே. சசிதரன் முன்பு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, பிரியதர்ஷன், லிசி ஆகியோருக்கு இடையே சமரசம் ஏற்பட்டது. இருவரும் கீழ் கோர்ட்டில் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து, விவாகரத்து பெற்றுக்கொள்வதாக கூறினார்கள்.

இதையடுத்து சென்னை குடும்பநல கோர்ட்டில், லிசியும், பிரியதர்ஷனுக்கும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு கடந்த மார்ச் மாதம் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி மேரி மரியா கிளிட்டா விசாரித்தபோது, லிசியும், பிரியதர்ஷனும் கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து கடந்த 17-ந்தேதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதி பிறப்பித்தார். அதில், ‘இருவரும் மனம் விரும்பி பிரிய சம்மதம் தெரிவித்துள்ளதால், அதை ஏற்று, அவர்களுக்கு கடந்த 1990-ம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி நடந்த திருமணத்தை ரத்து செய்கிறேன். அவர்களுக்கு பரஸ்பரம் விவாகரத்து வழங்குகிறேன்’ என்று நீதிபதி கூறியுள்ளார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions