திரைப்பட தேசிய விருது தேர்வுக்குழு தலைவராக டைரக்டர் பிரியதர்ஷன் நியமனம்

Bookmark and Share

திரைப்பட தேசிய விருது தேர்வுக்குழு தலைவராக டைரக்டர் பிரியதர்ஷன் நியமனம்

64-வது திரைப்பட தேசிய விருதுகள் தேர்வுக்குழு தலைவராக இயக்குநர் பிரியதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார். 

`கோபுரவாசலிலே', `லேசா லேசா', `காஞ்சிவரம்' உள்பட சில தமிழ் படங்களையும், ஏராளமான மலையாள படங்களையும்  டைரக்ட் செய்தவர் பிரியதர்ஷன். இவரை 64-வது தேசிய விருதுகள் தேர்வுக்குழு தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது.  இதற்காக டைரக்டர் பிரியதர்ஷனுக்கு திரை உலக பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பிரியதர்ஷன் கூறியதாவது,

 
இந்த முக்கிய பொறுப்பை ஏற்க மனரீதியாக தான் தயாராகி வருவதாக கூறினார். திரைப்படங்களை தேர்வு செய்யும் போது  என்னென்னவற்றை செய்ய வேண்டும் என்பதை தான் தீர்மானித்துவிட்டதாக தெரிவித்தார். அதன் மூலமே படங்களின் தரத்தை  மதிப்பிடவும் முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். இந்த தேர்வுக் குழுவில் சுமார் 86 படங்களை நாங்கள் பார்க்க  இருக்கிறோம். அதன் பின்னர் 4 பிரிவைச் சேர்ந்த குழுத் தலைவர்கள் இணைந்து படத்தை தேர்வு செய்ய உள்ளதாக அவர்  கூறினார். மார்ச் 16-ஆம் தேதி படங்களை பார்க்கத் துவங்குவதாகவும், ஏப்ரல் முதல் பாதி வரை பார்க்க உள்ளதாகவும் அவர்  தெரிவித்தார். 

திரைப்பட தேசிய விருதுகள் தேர்வுக்குழு தலைவராக இயக்குநர் பிரியதர்ஷன் பொறுப்பேற்பது இதுவே முதல்முறை என்பது  இங்கே குறிப்பிடத்தக்கது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions