6 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வருகிறார் ப்ரியாமணி

Bookmark and Share

6 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வருகிறார் ப்ரியாமணி

பாரதிராஜாவால் கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் ப்ரியாமணி. அதன் பிறகு அது ஒரு கனா காலம், மது படங்களில் நடித்தார். பருத்தி வீரன் படம் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. தேசிய விருதின் மூலம் புகழ்பெற்றார்.

ஆனால் அதற்கு பிறகுதான் அவருக்கு சறுக்கல் தொடங்கியது. காரணம் அவர் கிளாமர் பாதையை தேர்ந்தெடுத்ததுதான். பருத்தி வீரனுக்கு பிறகு வெளிவந்த மலைக்கோட்டை, ஆறுமுகம், படங்களில் கிளாமராக நடித்தார்.

அது அவருக்கு உதவில்லை. அதன் பிறகு தெலுங்கு பக்கம் போய்விட்டார். 2010ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ராவணன் படம்தான் அவர் கடைசியாக நடித்த தமிழ் படம். அதன் பிறகு சாருலதா என்ற கன்னட படம் தமிழில் டப்பாகி வெளிவந்தது.

தற்போது மீண்டும் அவர் 6 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கிறார். மிஷ்கின் உதவியாளர் ஜி.ஆர்.ஆதித்யா என்பவர் காமெடி படம் ஒன்றை இயக்க இருக்கிறார். அதற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.

கதை, திரைக்கதையை எழுதியிருக்கும் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். இதில் கற்றது தமிழ் ராம் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ப்ரியாமணி ஹீரோயினாக நடிக்கிறார். இன்னுமொரு இளம் ஹீரோ நடிக்கிறார். அவர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. ஜுன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.


Post your comment





Related News
ரசிகர்களின் விமர்சனத்தால் கோபமடைந்த பிரியாமணி!
பெங்களூரில் வரும் 29–ந்தேதி பிரியாமணி நிச்சயதார்த்தம்!
ஏப்ரல் 29-ல் நடிகை ப்ரியாமணி நிச்சயதார்த்தம்!
காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்வேன்: பிரியாமணி பேட்டி
நிருபரை பளார் விட்ட பிரியாமணி – தெலுங்கு திரையுலகில் பரபரப்பு
பிரியாமணியின் ரகசிய காதல் குறித்தும் காதலர் குறித்தும் வெளியான செய்தி
ஜோதிடர்கள் எச்சரிக்கை: திருமணத்தை தள்ளிப்போட்ட பிரியாமணி
காதலில் விழுந்த பிரியாமணி!
இன்னொரு வைஜெயந்தி ஐ.பி.எஸ் ஆக மாறுவாரா பிரியாமணி..?
ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: பிரியாமணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions