இன்னொரு வைஜெயந்தி ஐ.பி.எஸ் ஆக மாறுவாரா பிரியாமணி..?

Bookmark and Share

இன்னொரு வைஜெயந்தி ஐ.பி.எஸ் ஆக மாறுவாரா பிரியாமணி..?

“கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி” என ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் படத்தின் இசையமைப்பாளராக மென்மையான மெலடியால் தாலாட்டிய கன்னட இசையமைப்பாளர் ஆர்.பி.பட்நாயக், ஐந்து வருடங்களுக்கு முன்பு, தான் டைரக்டராக மாறப்போகிறேன் என அறிவித்தபோது பலரும் ஷாக் ஆனார்கள்..

மியூசிக் டைரக்டராவது படம் இயக்குவதாவது என சிலர் ஏளனமாக சிரித்தார்கள்.. ஆனால் இவரது முதல் இரண்டு படங்கள் இவருக்கு சிறந்த கதாசிரியருக்கான நந்தி விருதுகளை பெற்றுத்தந்து ஏளனம் செய்தவர்களின் வாயை அடைத்தன.

இப்படிப்பட்ட வீர தீர பராக்கிரமங்களை கொண்ட ஆர்.பி.பட்நாயக் தற்போது தனது ஏழாவது படத்தை தெலுங்கு மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் இயக்கி வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப்படத்தில் முதன்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியாமணி.

முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்தப்படத்தில் பிரியாமணியின் போலீஸ் கேரக்டர் ரொம்பவே சவாலானது என்கிறார்கள்.

25 வருடங்களுக்கு முன்பு விஜயசாந்திக்கு, வைஜெயந்தி ஐ.பி.எஸ் மூலம் திருப்புமுனை ஏற்பட்டது போல, ஆகஸ்ட்டில் வெளியாக இருக்கும் இந்தப்படம் பிரியாமணியின் கேரியரில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் படக்குழுவினர் சொல்லி வருகிறார்களாம்.


Post your comment





Related News
ரசிகர்களின் விமர்சனத்தால் கோபமடைந்த பிரியாமணி!
பெங்களூரில் வரும் 29–ந்தேதி பிரியாமணி நிச்சயதார்த்தம்!
ஏப்ரல் 29-ல் நடிகை ப்ரியாமணி நிச்சயதார்த்தம்!
காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்வேன்: பிரியாமணி பேட்டி
நிருபரை பளார் விட்ட பிரியாமணி – தெலுங்கு திரையுலகில் பரபரப்பு
பிரியாமணியின் ரகசிய காதல் குறித்தும் காதலர் குறித்தும் வெளியான செய்தி
ஜோதிடர்கள் எச்சரிக்கை: திருமணத்தை தள்ளிப்போட்ட பிரியாமணி
காதலில் விழுந்த பிரியாமணி!
ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: பிரியாமணி
‘பாய்பிரண்ட்’ தயாரிப்பாளரால் பிரச்னை - ராகினி வாய்ப்பு பிரியாமணிக்கு கைமாறுகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions