பெங்களூரில் வரும் 29–ந்தேதி பிரியாமணி நிச்சயதார்த்தம்!

Bookmark and Share

பெங்களூரில் வரும் 29–ந்தேதி பிரியாமணி நிச்சயதார்த்தம்!

பாரதி ராஜாவின் கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரியாமணி. பருத்தி வீரன் படத்தின் மூலம் திரும்பிப் பார்க்கும் நடிகை ஆனார். இந்த படத்தில் நடித்தற்காக தேசிய விருதும் பெற்றார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தார். சமீபகாலமாக தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்பு இல்லை.

இந்த நிலையில் ஒரு கிரிக்கெட் போட்டியின் போது சந்தித்த மும்பை தொழில் அதிபருடன் பிரியாமணிக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்துக் கொண்டனர். அந்த தொழில் அதிபரின் பெயர் முஸ்தபாராஜ்.

நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கிறோம். இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வோம் என்று பிரியாமணி சமீபத்தில் அறிவித்தார். இப்போது, தனது திருமண நிச்சயதார்த்தம் வருகிற 29–ந் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது என்று பிரியாமணி தெரிவித்து இருக்கிறார்.

வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் பிரியாமணி – முஸ்தபாராஜ் திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது. நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதி முடிவு செய்யப்படுகிறது. திருமணத்துக்கு தயாராவதால் பிரியாமணி கைவசம் உள்ள படங்களை முடித்துக் கொடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.


Post your comment





Related News
ரசிகர்களின் விமர்சனத்தால் கோபமடைந்த பிரியாமணி!
ஏப்ரல் 29-ல் நடிகை ப்ரியாமணி நிச்சயதார்த்தம்!
காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்வேன்: பிரியாமணி பேட்டி
நிருபரை பளார் விட்ட பிரியாமணி – தெலுங்கு திரையுலகில் பரபரப்பு
பிரியாமணியின் ரகசிய காதல் குறித்தும் காதலர் குறித்தும் வெளியான செய்தி
ஜோதிடர்கள் எச்சரிக்கை: திருமணத்தை தள்ளிப்போட்ட பிரியாமணி
காதலில் விழுந்த பிரியாமணி!
இன்னொரு வைஜெயந்தி ஐ.பி.எஸ் ஆக மாறுவாரா பிரியாமணி..?
ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: பிரியாமணி
‘பாய்பிரண்ட்’ தயாரிப்பாளரால் பிரச்னை - ராகினி வாய்ப்பு பிரியாமணிக்கு கைமாறுகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions