காதலில் விழுந்த பிரியாமணி!

Bookmark and Share

காதலில் விழுந்த பிரியாமணி!

பாரதிராஜாவால் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமான பிரியாமணி, பருத்தி வீரன் படத்தில் நாயகியாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

ஆனால், அதன் பின்னும் அவரை தமிழ்த் திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தெலுங்கிலும் ஓரளவிற்கு நடித்து வந்தவர் ஒரு கட்டத்தில் அங்கும் ஒதுக்கப்பட்டார். இருந்தாலும் டிவி நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து கொண்டு இன்னும் வெளிச்சத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறார் பிரியாமணி.

தமிழில் 2012ல் வெளிவந்த சாருலதா படத்திற்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. ஒரு சில கன்னடப் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய காதலரைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் பிரியாமணி.

“என்னுடைய காதலர் முஸ்தஃபா ராஜ் கூச்ச சுபாவம் உள்ளவர். அதனால்தான் எங்களது காதலைப் பற்றி இதுவரை சொல்லாமல் இருந்தேன். அவரிடம் அனுமதி பெற்ற பிறகு தற்போது இந்தக் காதலை வெளிப்படுத்துகிறேன்,” என்று கூறியுள்ளார்.

இருவரது பெற்றோர்களும் அவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டார்களாம். ஆனால், திருமணம் இன்னும் கொஞ்ச காலம் கழித்தே நடக்கப் போகிறதாம்.

முஸ்தஃபா ராஜ் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறாராம். செலிபிரிட்டி கிரிக்கெட் உட்பல பல பெரிய ஈவன்ட்டுகளை அவருடைய கம்பெனிதான் நடத்தி வருகிறதாம். பிரியாமணியும் செலிபிரிட்டி கிரிக்கெட்டில் பிரான்ட் அம்பாசிடராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சமயத்தில்தான் இருவரும் பழகி நட்பாகி பின்னர் காதலர்களாகவும் மாறினார்கள் என்கிறார்கள். விரைவில் இவர்களது திருமணச் செய்தி பற்றிய அறிவிப்பு முறையாக வரும் என்று பிரியாமணிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
ரசிகர்களின் விமர்சனத்தால் கோபமடைந்த பிரியாமணி!
பெங்களூரில் வரும் 29–ந்தேதி பிரியாமணி நிச்சயதார்த்தம்!
ஏப்ரல் 29-ல் நடிகை ப்ரியாமணி நிச்சயதார்த்தம்!
காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்வேன்: பிரியாமணி பேட்டி
நிருபரை பளார் விட்ட பிரியாமணி – தெலுங்கு திரையுலகில் பரபரப்பு
பிரியாமணியின் ரகசிய காதல் குறித்தும் காதலர் குறித்தும் வெளியான செய்தி
ஜோதிடர்கள் எச்சரிக்கை: திருமணத்தை தள்ளிப்போட்ட பிரியாமணி
இன்னொரு வைஜெயந்தி ஐ.பி.எஸ் ஆக மாறுவாரா பிரியாமணி..?
ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: பிரியாமணி
‘பாய்பிரண்ட்’ தயாரிப்பாளரால் பிரச்னை - ராகினி வாய்ப்பு பிரியாமணிக்கு கைமாறுகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions