விளம்பர படங்களில் நடிக்க பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.100 கோடி சம்பளம்!

Bookmark and Share

விளம்பர படங்களில் நடிக்க பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.100 கோடி சம்பளம்!

இந்தி பட கதாநாயகிகள் தமிழ், தெலுங்கு, மலையாள நடிகைகளை விட பல மடங்கு சம்பளம் வாங்குகிறார்கள்.

தென்னிந்திய நடிகைகளில் கூடுதல் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார்.

அவர் ஒரு படத்துக்கு ரூ.2.50 கோடி வாங்குகிறார். ஆனால் இந்தியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் கங்கனா ரனாவத் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ.11 கோடி.

இரண்டாவது இடத்தில் இருக்கும் கரீனா கபூர் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வாங்குகிறார். தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோர் தலா ரூ. 9 கோடியும் வித்யாபாலன், கத்ரினா கைப் ஆகியோர் தலா ரூ.7 கோடியும் அனுஷ்கா சர்மா ரூ.6 கோடியும் அலியாபட் ரூ.5 கோடியும் சோனாக்சி சின்ஹா ரூ.4 கோடியும் சம்பளம் வாங்குகிறார்கள்.

இது தவிர விளம்பர படங்களில் நடித்தும் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். சில நடிகைகள் சினிமாவை விட விளம்பர படங்களுக்கு அதிக சம்பளம் வாங்குகிறார்கள்.

பிரியங்கா சோப்ரா ஒரே நேரத்தில் 24 விளம்பர படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படங்களில் நடிக்க அவர் ரூ.100 கோடி சம்பளம் பேசி இருப்பதாக இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது.

பழரச பானங்கள் தயாரிக்கும் நிறுவனம், நகைக்கடைகள், தனியார் விமான கம்பெனி, ஆன் லைன் வர்த்தக கம்பெனிகள் போன்றவை இதில் அடக்கம்.

பழரச பானம் தயாரிக்கும் நிறுவனம் மட்டும் பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.6 கோடி கொடுத்து விளம்பர படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விளம்பர நிறுவனங்களுக்கான படப்பிடிப்பு மும்பையில் தற்போது நடந்து வருகிறது.

40 நாட்கள் இந்த நிறுவனங்களுக்கு கால்சீட் கொடுத்து பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். இதுபோல் மற்ற நடிகைகளும் விளம்பர படங்களில் நடிக்க கோடிகோடியாய் வாங்குகிறார்கள்.


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
அட்டைப்படத்திற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா - புகைப்படம் உள்ளே
தன்னை விட வயது மிகக் குறைந்த சினிமா பிரபலத்துடன் காதல்! புகைப்படத்தால் பரபரப்பாக்கிய பிரபல நடிகை
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
நடு ரோட்டில் லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ், வசமாக சிக்கிய தளபதி பட நடிகை - புகைப்படம் உள்ளே.!
11 புள்ள பெத்துக்கணும், ஆனால் - தளபதி நாயகியின் விபரீத ஆசை.!
டாக்டர் பட்டமளிப்பு விழா: மனமுடைந்த பிரியங்கா சோப்ரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions