
சாமி இயக்கத்தில் வெளியான கங்காரு படத்தில் தங்கை வேடத்தில் நடித்தவர் பிரியங்கா. அக்மார்க் தமிழ்நாட்டு பெண்ணான இவர் அந்த படத்தில் சில காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக நடித்து கைதட்டல் பெற்றார்.
விளைவு, தற்போது பல படங்களில் ஹீரோயினாக பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதில் இகோர் இயக்கத்தில் நடித்துள்ள வந்தாமலை படம் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் தமிழ் என்ற புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடித்திருக்கும் பிரியங்கா, சென்னை தமிழ் பேசி கலக்கலாக நடித்திருக்கிறார். குறிப்பாக, அட்டகத்தி படம் நந்திதாவுக்கு எப்படியொரு திருப்புமுனையாக அமைந்ததோ அதேபோல் இந்த படம் பிரியங்காவுக்கு திருப்பத்தை கொடுக்கும் வகையில் அவரது நடிப்பு அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறது.
இந்த படத்தில் நடித்தது பற்றி பிரியங்கா கூறும்போது, இந்த வந்தாமலை படத்தில் நடித்தபோது யார் சொதப்பினாலும், பிரியங்கா மட்டும் சொதப்பாமல் நடித்து விடுவார்.
அந்த வகையில் அவர் டேக் ஆர்ட்டிஸ்ட் என்றார்கள். அதுவே எனக்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது. அதோடு, இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள 4 பசங்களையும் அடி அடி என்று பின்னி எடுக்கிற வேடம் எனக்கு.
இதில் வசந்தா என்ற ரோலில் நடித்துள்ளேன். என்னைக்கண்டாலே அவர்கள் ஓடி ஒளிவார்கள். அதேபோல் என்னிடம் அடிவாங்கும்போது அவர்களும் நன்றாக நடித்தார்கள்.
அதனால்தான் அந்த காட்சிகள் நன்றாக வந்தது. என்னாலும் சிறப்பாக நடிக்க முடிந்தது. அந்த வகையில் இந்த வந்தாமலை படத்தில் நடித்தது எனக்கு நல்ல திருப்திகரமாக அமைந்துள்ளது.
கண்டிப்பாக தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு படம் பிடிக்கும். மேலும், குமுதா ஹேப்பி மாதிரி வசந்தாவும் ரொம்ப ஹேப்பியாக இருக்கிறேன் என்றார் பிரியங்கா.
Post your comment