பிரியங்கா சோப்ராவின் பாட்டியின் உடல் அடக்கம்!

Bookmark and Share

பிரியங்கா சோப்ராவின் பாட்டியின் உடல் அடக்கம்!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் தமிழன் உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு குமரகத்தில் உறவினர்கள் உள்ளனர். இவரது பாட்டி மேரி கொச்சம்மா என்பவரும் குமரகத்தில் வசித்து வந்தார்.

94 வயதான மேரி கொச்சம்மா கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து போனார். இந்த தகவல் அறிந்து நடிகை பிரியங்கா சோப்ரா குமரகத்திற்கு சென்றார்.

மேரி கொச்சம்மாவின் உறவினர்கள் பலரும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ளனர். அவர்களும் மேரி கொச்சம்மா இறுதிச்சடங்கில் பங்கேற்க குமரகம் வந்தனர்.

அட்டமங்கலம் ஆலயம் என்று அழைக்கப்படும் குமரகம் புனித ஜாண் ஜேக்கப்பைட் சிரியன் ஆலயத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் மேரி கொச்சம்மாவின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். இதற்காக ஆலய நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டனர்.

ஆனால் ஆலய நிர்வாகத்தினர் மேரி கொச்சம்மா உடலை குமரகம் புனித ஜாண் ஜேக்கப்பைட் சிரியன் ஆலய கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய இயலாது என கைவிரித்து விட்டனர்.

மேரி கொச்சம்மா இந்த ஆலயத்தின் உறுப்பினர் இல்லை. அவரது உறுப்பினர் அட்டை காலாவதியாகி பல ஆண்டுகள் ஆகி விட்டது. அதை புதுப்பிக்கவோ அல்லது ஆலயத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று விண்ணப்பமோ மேரி கொச்சம்மா தரப்பில் இருந்து இதுவரை ஆலய நிர்வாகத்திற்கு வரவில்லை.

இப்போது அவர் இறந்த பின்பு இங்கு அவரது உடலை அடக்கம் செய்ய ஆலய விதிமுறைகள் இடம் அளிக்காது. எனவே மேரி கொச்சம்மா உடலை வேறு எங்காவது அடக்கம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டனர்.

இதை கேட்டு மேரி கொச்சம்மாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் அதிர்ந்து போனார்கள். இந்த பிரச்சினை அருகில் உள்ள பொன்குன்னம் தேவாலய நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களும் குமரகம் ஆலய நிர்வாகிகளிடம் பேசிப் பார்த்தனர். அதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை.

எனவே மேரி கொச்சம்மாவின் உடல் குமரகத்தில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொன்குன்னம் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு ஆலய கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட் டது.

குமரகம் ஆலய நிர்வாகிகளின் இந்த செயலை மேரி கொச்சம்மாவின் நெருங்கிய உறவினர்கள் கடுமையாக விமர்சித்தனர். மேரி கொச்சம்மா இந்த ஆலயத்தில் தான் திருமுழுக்கு பெற்றார். இறுதி வரை இந்த ஆலயத்தில்தான் பிரார்த்தனை செய்தார். இறந்தால் இங்குதான் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தார். ஆனால் ஆலய நிர்வாகிகளால் அவரது இறுதி ஆசை நிறைவேறவில்லை என்றனர்.

இதுபற்றி ஆலய நிர்வாகத்தினர் கூறும்போது, ஆலயத்தின் சட்ட திட்டங்களை யாருக்காகவும் மாற்ற இயலாது. எனவேதான் இந்த கடினமான முடிவை மேற்கொண்டோம் என்றனர். 

 


Post your comment

Related News
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions