விளம்பரத்தில் நடிக்க நடிகைகள் வாங்கும் சம்பளம் விவரம்!

Bookmark and Share

விளம்பரத்தில் நடிக்க நடிகைகள் வாங்கும் சம்பளம் விவரம்!

பாலிவுட் நடிகைகள் விளம்பர படங்களில் நடிக்க வாங்கும் சம்பளத்தை கேட்டால் இப்பவே உங்களுக்கு எல்லாம் கண்ணை கட்டிக் கொண்டு வரும். பாலிவுட் நடிகர்கள் விளம்பரப் படங்களில் நடிக்க பெரிய தொகையை சம்பளமாக வாங்குகிறார்கள்.

அவர்களுக்கு நாங்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என நிரூபித்துள்ளனர் பாலிவுட் நடிகைகள். சில நொடிகள் நடிக்க கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள்.

விளம்பர படங்களில் நடிக்க அவர்கள் வாங்கும் சம்பள விவரம் வருமாறு,

ஐஸ்வர்யா ராய் சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காவிட்டாலும் விளம்பர உலகின் முடிசூடா ராணியாக அவர் உள்ளார் என்றே கூற வேண்டும். அவர் விளம்பர படங்களில் நடிக்க ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.1 முதல் 1.5 கோடி சம்பளம் வாங்குகிறார்.

பாலிவுட்டின் ஹிட் நாயகி என்று யாரைக் கேட்டாலும் அவர்கள் தீபிகா படுகோனேவை தான் கை காட்டுவார்கள். அந்த அளவுக்கு அடுத்தடுத்து அவரது படங்கள் ஹிட்டாகிக் கொண்டிருக்கிறது. அவர் விளம்பர படத்தில் நடிக்க நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி மட்டுமே பெறுகிறார்.

கத்ரீனா கைஃப் அடிக்கடி படங்களில் நடிக்காவிட்டாலும் விளம்பரப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் நாள் ஒன்றுக்கு ரூ.1.25 முதல் 1.75 கோடியை சம்பளமாக கேட்கிறார். அவர் அவ்வளவு கேட்டாலும் சம்பந்தப்பட்டவர்கள் முகம் சுளிக்காமல் அள்ளிக் கொடுக்கிறார்கள்.

ஆலியா பட் பல விளம்பர படங்களில் நடித்து கல்லா கட்டி வருகிறார். அவர் விளம்பரங்களில் நடிக்க நாள் ஒன்றுக்கு வாங்கும் சம்பளம் ரூ.1 கோடி ஆகும்.

வளர்ந்து வரும் நடிகையான ஷ்ரத்தா கபூரும் விளம்பர உலகிற்கு வந்துவிட்டார். கத்ரீனா கைஃப் நடித்து வந்த வீட் விளம்பரத்தில் தற்போது ஷ்ரத்தா தான் வருகிறார். அவர் விளம்பரத்தில் நடிக்க நாள் ஒன்றுக்கு ரூ.60 முதல் 70 லட்சம் பெறுகிறார்.

பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் விளம்பர படங்களில் நடிப்பதை மட்டும் கைவிடாதவராக இருந்தார் அனுஷ்கா சர்மா. தற்போது அவர் கையில் படங்களும் உள்ளன, ஏராளமான விளம்பர படங்களும் உள்ளன. அவரின் ஒரு நாள் சம்பளம் ரூ.60 முதல் 70 லட்சம்.

ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களும் ரூ.100 கோடி வசூலிக்கும் என்பதை மேரி கோம் படம் மூலம் நிரூபித்தவர் பிரியங்கா சோப்ரா. அவர் விளம்பர படங்களில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.1 முதல் 1.3 கோடி வாங்குகிறார்.

ஹிட் அதன் பிறகு பிளாப் என்று ஒரு நிலையில் இல்லாத கங்கனா ரனாவத் இரண்டு தேசிய விருதுகள் பெற்ற நடிகை ஆவார். அவர் விளம்பரத்தில் நடிக்க நாள் ஒன்றுக்கு ரூ.50 லட்சம் மட்டுமே பெறகிறார்.


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions