என் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு பத்மஸ்ரீ விருது: பிரியங்கா சோப்ரா

Bookmark and Share

என்  கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு பத்மஸ்ரீ விருது: பிரியங்கா சோப்ரா

இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவரது நடிப்பில் வெளிவந்த டான், பர்பி, மேரிகோம், காமினி, பாஜிராவ் மஸ்தானி உள்ளிட்ட பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. 2008-ல் ‘பேஷன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். 

அமெரிக்க டி.வி தொடரில் வந்து மக்களுக்கு பிடித்த தெற்காசிய நடிகை என்ற குவான்டிகோ விருதுக்கும் தேர்வானார். தற்போது மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அவருக்கு கிடைத்துள்ளது. விருது பெற்றது குறித்து பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி வருமாறு:- 

‘‘பத்மஸ்ரீ விருது கிடைத்ததை வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியவில்லை. கனவில் வாழ்வது போல் உணர்கிறேன். எனது தொழிலில் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாகவே இதை கருதுகிறேன்.

இந்த வருடம் எனக்கு மிகச்சிறந்த வருடமாக அமைந்துள்ளது. தெற்காசியாவில் மக்களுக்கு பிடித்த நடிகை என்ற குவான்டிகோ விருது பெற்றதன் தொடர்ச்சியாக பத்மஸ்ரீ விருதும் கிடைத்து இருக்கிறது. 

இது எனக்கு மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது. பெருமையாக இருக்கிறது. இதற்காக மக்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஒரு ராணுவ அதிகாரியின் மகளாக இந்த விருது எனக்கு மிகவும் ஸ்பெஷல்.

பத்மஸ்ரீ விருது, மேலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற பொறுப்பையும் ஊக்கத்தையும் எனக்குள் ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions