கல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க மவுனம் சாதிக்கும் பிரியங்கா சோப்ரா!

Bookmark and Share

 கல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க மவுனம் சாதிக்கும் பிரியங்கா சோப்ரா!

பிரபல குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவான திரைப்படத்தில் நடித்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா விண்வெளி பயணத்தின்போது விபத்தில் பலியான கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாரிக்கப்படவுள்ள புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகின. 

அமெரிக்க தொலைக்காட்சி தொடரான ‘குவான்ட்டிகோ’வில் தோன்றி அங்கும் பிரியங்கா சோப்ரா பிரபலமாகி வருகிறார். இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட 44 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, உலகம் முழுவதும் இந்த தொடர்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில், கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாரிக்கப்படவுள்ள படத்தில் நடிப்பதுபற்றி இன்னும் வெளிப்படையாக எதுவும் அறிவிக்காமல் உள்ளார்.

இதுதொடர்பாக, நிருபர்களின் கேள்விக்கும் மழுப்பலாகவே பதில் அளித்துள்ள அவர், தற்போது சிறந்த கதையம்சங்களுடன் கூடிய நிறைய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இவற்றில் பலவற்றை தேர்வு செய்யும் எண்ணம் எனக்குள்ள போதிலும், அவை எல்லாவற்றிலும் நடிப்பதற்கான நேரம் என்னிடம் இல்லை. 

தற்போது கைவசம் ஆறு படங்கள் உள்ளன. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமாக பறந்துகொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் எதில் முதலில் நடிப்பது என்பதை தீர்மானிக்கவே சிரமமாக உள்ளது என பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா, 1997-ம் ஆண்டு முதன்முதலாக விண்வெளிக்கு சென்றார். அமெரிக்க விண்வெளி ஓடமான கொலம்பியாவில் விண்வெளிக்கு சென்று ஆய்வுகளை செய்துவிட்டு திரும்புகையில் கடந்த 2003-ம் ஆண்டு ஏற்பட்ட கோர விபத்தில் கல்பனா சாவ்லா உள்பட ஏழுபேர் பலியானது நினைவிருக்கலாம்.

 


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions