மும்பையில் பிரியங்கா சோப்ரா ரூ.100 கோடிக்கு பங்களா வாங்கினார்

Bookmark and Share

மும்பையில் பிரியங்கா சோப்ரா ரூ.100 கோடிக்கு பங்களா வாங்கினார்

‘தமிழன்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். 2002-ல் இருந்து படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.முதல் இடத்தில் இருக்கும் கங்கனா ரணாவத் சம்பளம் ரூ.11 கோடி. பிரியங்கா சோப்ரா ரூ.9 கோடி வாங்குகிறார். இவருக்கு 34 வயது ஆகிறது.

இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. மும்பையில் ரூ.100 கோடிக்கு பிரியங்கா சோப்ரா ஆடம்பர பங்களா வாங்கி இருப்பதாக இந்தி பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.சமீபத்தில் எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகைக்கு பங்களா வீடு வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரபலமான கட்டிட நிறுவனத்திடம் இருந்து இந்த பங்களா வீட்டை அவர் வாங்கி இருப்பதாகவும் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த பங்களாவை அவர் தனது கனவு இல்லமாக உருவாக்கி வருகிறார். பிரியங்கா சோப்ராவின் ஆலோசனைப்படியே வீட்டை வடிவமைத்து கட்டி வருகிறார்கள்.

ஒவ்வொரு அறையும் அழகிய வேலைப்பாடுகளுடன் உருவாகிறது. பங்களாவின் தோற்றம் அரண்மனை போல் இருக்கவேண்டும் என்று கட்டுமான நிறுவனத்திடம் அவர் கூறி இருக்கிறார். உள் அலங்காரங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து பொருட்களை வாங்கி குவிக்கிறார்கள்.விரைவில் இந்த பங்களாவில் பிரியங்கா சோப்ரா குடியேற இருக்கிறார். ரூ.100 கோடிக்கு வீடு வாங்கிய விவரத்தை சக நடிகர்-நடிகைகளுக்கு தெரிவிக்காமல் அவர் ரகசியமாகவே வைத்து இருந்தார். ஆனால் இப்போது அது வெளிச்சத்துக்கு வந்து விட்டது. பிரியங்கா சோப்ரா கட்டும் ஆடம்பர பங்களா வீட்டை பார்க்க இந்தி நடிகர்-நடிகைகள் ஆர்வமாக இருக்கிறார்கள். 


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions