போபாலில் கங்காஜல்-2 ஷூட்டிங் துவங்கியது!

Bookmark and Share

போபாலில் கங்காஜல்-2 ஷூட்டிங் துவங்கியது!

பிரகாஷ் ஜா இயக்கத்தில் உருவாகி வரும் அதிரடி போலீஸ் படம் கங்காஜல்-2. இப்படத்தில் ப்ரியங்கா சோப்ரா போலீஸாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட ஷூட்டிங் எல்லாம் முடிந்தநிலையில் இப்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு போபாலில் துவங்கியுள்ளது. அங்கு ப்ரியங்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 

இதுப்பற்றி ப்ரியங்கா சோப்ரா கூறியிருப்பதாவது, நான் ஜோயா அக்தர், விஷால் பரத்வாஜ் உள்ளிட்ட பல திறமையான இயக்குநர்களின் படத்தில் நடித்துள்ளேன். இப்போது பிரகாஷ் ஜா படத்தில் நடித்து வருகிறேன். என்னுடன் அவரும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். தற்போது போலீஸ் கதைக்கு நல்ல வரவேற்பு இருப்பதை உணர்ந்து அவர் இந்த கதையை இயக்கி வருகிறார் என்றார். 

ப்ரியங்கா சோப்ரா, அமெரிக்காவில் ஔிப்பரப்பாகும் பிரபல டி.வியின் சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதற்காக அமெரிக்காவும் அடிக்கடி சென்று வருகிறார். இருந்தாலும் பாலிவுட்டில் தன் படங்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions