மேரி கோம் என் இதயத்தின் ஒரு பகுதி: பிரியங்கா சோப்ரா

Bookmark and Share

மேரி கோம் என் இதயத்தின் ஒரு பகுதி: பிரியங்கா சோப்ரா

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘மேரி கோம்’ என்ற படம் கடந்த வருடம் வெளியானது. இதில் மேரி கோம் கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார்.

குத்துச்சண்டை வீராங்கனையாகவும் எதற்கும் பயப்படாத துணிச்சலான பெண்ணாகவும் நடித்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

இப்படம் 62வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருதினைப் பெற்றது. இந்த விருதினை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

இதுகுறித்து பிரியங்கா சோப்ரா கூறும்போது,

“தேசிய திரைப்பட விழாவில் சிறந்த பொழுதுபோக்கு விருது ‘மேரி கோம்’ படத்திற்கு கிடைத்தது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இதற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இந்தப் படத்தில் மிகவும் சிரமப்பட்டு நடித்திருந்தேன். அதற்கு பலனாக இந்த விருது கிடைத்திருக்கிறது. வீராங்கனை மேரி கோம் என் இதயத்தில் ஒரு பகுதியாக இருக்கிறார். இந்த விருது கிடைக்க காரணமாக இருந்த மேரி கோமுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். 


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions