ஆபாசமாக நடிக்கும்படி என்னை வற்புறுத்தினார்கள்: பிரியங்கா சோப்ரா

Bookmark and Share

ஆபாசமாக நடிக்கும்படி என்னை வற்புறுத்தினார்கள்: பிரியங்கா சோப்ரா

“நான் உலக அழகி பட்டம் வென்று சினிமாவுக்கு வந்தேன். ஆரம்பத்தில் இங்கு கசப்பான அனுபவங்களே கிடைத்தன. டைரக்டர்களில் கேவலமானவர்களும் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன்.

ஒரு படத்தில் என்னை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை தொடங்கினார்கள். இரண்டு நாட்கள் அதில் நடித்தேன். மூன்றாவது நாள் டைரக்டர் என்னிடம் வந்து, “என்ன உடை அணிந்து இருக்கிறாய்?, இப்படி நடித்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். உடம்பு முழுவதும் தெரிகிற மாதிரி உடை அணிந்து ஆபாசமாக நடித்தால்தான் பார்ப்பார்கள். நான் தைத்து தருகிற குட்டைப்பாவாடையை உடுத்திக்கொண்டு நடிக்க வா” என்று மோசமாக திட்டினார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரில் ஏறி வீட்டுக்கு வந்து விட்டேன். அப்போது எனது பொருளாதார நிலைமை மோசமாக இருந்தது. ஆனாலும் தெரிந்தவர்களிடம் உடனடியாக பணம் திரட்டி அந்த படத்துக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்து விட்டு நடிக்க முடியாது என்று கூறி விலகி விட்டேன்.

சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் எதற்கும் தயாராக இருக்கிறார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இந்த துறையில் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் வருகிறார்கள். அவர்களை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு. 

சில படங்களில் கதைக்கு கவர்ச்சி தேவையாக இருந்தால் அதில் நடிப்பதற்கு நான் ஆட்சேபிப்பது இல்லை. அதை வைத்து நிஜ வாழ்க்கையிலும் படுக்கை அறைக்கு நான் தயாராக இருக்கிறேன் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.

அமெரிக்காவில் இனவெறி தாக்குதல் நடப்பதாக இப்போது பேசுகிறார்கள். நான் சிறு வயதிலேயே இதை சந்தித்து இருக்கிறேன். 8-வது வகுப்பு படித்தபோது அமெரிக்காவில் லோவா பகுதியில் வசித்த எனது சித்தி வீட்டுக்கு பெற்றோர்கள் அனுப்பி வைத்தனர். 3 வருடங்கள் அங்கு தங்கி படித்தேன். அப்போது என்னை அமெரிக்கர்கள் கேலி செய்தார்கள்.

நீ ஏன் இங்கு வந்தாய்? உன் நாட்டுக்கு ஓடிப்போய் விடு என்று மிரட்டினார்கள். எனது காலின் மேல் பகுதியில் இரண்டு மச்சங்கள் இருந்தன. பள்ளி சீருடை அணியும்போது அது வெளியே தெரியும். அந்த மச்சத்தை காட்டி கருப்பி என்று கேலி செய்து என்னை அழ வைத்தார்கள். அதை எப்போதும் என்னால் மறக்க முடியாது.

இப்போது அவர்கள் கேலி செய்த அதே கால்கள் சம்பந்தப்பட்ட 11 உற்பத்தி பொருட்களுக்கு விளம்பர மாடலாக இருந்து அவற்றின் விற்பனையை உயர்த்தி இருக்கிறேன்”.

இவ்வாறு பிரிங்கா சோப்ரா கூறினார். 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions