வாட்ஸ் அப் குரூப்பை கலைக்கவேண்டும் ! கவுன்சிலில் கட்டளை !

Bookmark and Share

வாட்ஸ் அப் குரூப்பை கலைக்கவேண்டும் ! கவுன்சிலில் கட்டளை !

படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, படம் எடுக்காத தயாரிப்பாளர்களும் இன்று கவலையே இல்லாமல் இருக்கிறார்கள். காரணம்.. அவர்களுக்கு தேவைக்கு அதிகமான எண்டர்டெயிண்மென்ட் இலவசமாக கிடைத்து வருகிறது. 

அதாவது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள தயாரிப்பாளர்கள் வாட்ஸ்அப்பில் பல குரூப்புகளை வைத்துக்கொண்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகளைப் பற்றி விமர்சனம் செய்கிற பெயரில் பயங்கரமான கருத்துக்களை வெளியிடுகின்றனர். அதுமட்டுமல்ல எதிர் அணியினர் பற்றியும் கடுமையான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

இதில் தாணுவின் ஆதரவாளர்களின் குரூப், செயலாளர் டி.சிவாவின் ஆதரவாளர்களின் குரூப், தாணுவுக்கு எதிரானவர்களின் குரூப், கலகம் செய்வோர்களின் குரூப் என பல குரூப்கள் உள்ளன. 

சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் தன் கருத்தை வாட்ஸ்அப்பில் வெளியிட சற்று நேரத்தில் அவரை சில தயாரிப்பாளர்கள் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக தயாரிப்பாளர்கள் யாரும் வாட்ஸ் அப் குரூப் வைக்கக் கூடாது, மீறி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம். இந்த எச்சரிகையை தற்போது வரை யாரும் சட்டைப்பண்ணவில்லை.


Post your comment





Related News
அதுல நானும் ஒருத்தன், தயாரிப்பாளர் சங்கத்திற்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - நடந்தது என்ன?
தயாரிப்பாளரை திட்டிய தல அஜித்? மீண்டும் தள்ளி போகும் விஸ்வாசம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தயாரிப்பாளர் சங்க ஸ்ட்ரைக், இவ்வளவு கோடி நஷ்டமா? - அதிர்ச்சியாக்கும் தகவல்.!
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பால் தள்ளி போகுமா தல தளபதி படங்கள்? - புலம்பும் ரசிகர்கள்.!
மார்ச் 1ம் தேதி முதல் எந்த படமும் வெளிவராது?
தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு
கேளிக்கை வரி பிரச்சினையில் 2 நாளில் நல்ல முடிவு கிடைக்கும்: விஷால் நம்பிக்கை
விவசாயிகள் போராட்டம் தெரிகிறது ஆனால் எங்கள் நிலைமை - தனுஷின் தந்தை கொதிப்பு
அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால்?- அதிரடியாக முடிவு எடுத்த விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions