நாளை சினிமா தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல்: விஷால், கேயார், ராதாகிருஷ்ணன் அணிகள் மோதல்

Bookmark and Share

நாளை சினிமா தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல்: விஷால், கேயார், ராதாகிருஷ்ணன் அணிகள் மோதல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.

அதன்படி இந்த ஆண்டு நடைபெற வேண்டிய தயாரிப்பாளர் சங்க தேர்தல் நாளை நடக்கிறது. இதற்கான ஓட்டுப்பதிவு சென்னை அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவை நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தில் மொத்தம் 1211 உறுப்பினர்கள் ஓட்டு போட தகுதி பெற்றுள்ளனர். இதில் தலைவர், துணை தலைவர்கள், பொருளாளர், செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மொத்தம் 137 பேர் போட்டியிடுகிறார்கள்.

தயாரிப்பாளர் சங்க பதவிக்கு முதலில் விஷால், ராதாகிருஷ்ணன், டி.சிவா, கலைப்புலி ஜி.சேகரன், கேயார் ஆகியோர் தலைமை யில் 5 அணிகள் களம் இறங்கின.

இதில் ராதாகிருஷ்ணன், டி.சிவா, கலைப்புலி ஜி.சேகரன் ஆகியோர் தற்போது ஒரே அணியாக சேர்ந்துள்ளனர். எனவே விஷால் அணி, கேயார் அணி, ராதாகிருஷ்ணன் அணி ஆகிய 3 அணிகள் இப்போது போட்டியிடுகின்றன. இதன்படி தலைவர் பதவிக்கு இவர்கள் 3 பேர் மோதுகிறார்கள்.

2 கவுரவ செயலாளர்கள் பதவிக்கு மிஷ்கின், ஞானவேல் ராஜா, ஏ.எல். அழகப்பன், கதிரேசன், சதீஷ் குமார், மன்னன், சிவசக்தி பாண்டியன் ஆகிய 7 பேர் நிற்கிறார்கள். இரண்டு துணை தலைவர் பதவிக்கு பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், ராஜன், சுரேஷ், பவித்திரன், ஏ.எம்.ரத்னம், ரங்கா ரெட்டி, பி.டி.செல்வகுமார் ஆகிய 8 பேர் போட்டியிடுகிறார்கள்.


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions