விபத்தில் சிக்கினார் கங்னம் ஸ்டைல் சூப்பர் ஸ்டார் பி.எஸ்.ஒய்

Bookmark and Share

விபத்தில் சிக்கினார் கங்னம் ஸ்டைல் சூப்பர் ஸ்டார் பி.எஸ்.ஒய்

உலகின் பிரபல பாப் பாடகரான தென் கொரியாவின் கங்னம் ஸ்டைல் புகழ் பி.எஸ்.ஒய் விபத்தில் சிக்கினார்.

பாப் இசை உலகில் ராஜாங்கம் நடத்திய அமெரிக்காவை மிரளவைத்தவர் தென் கொரியாவின் பி.எஸ்.ஒய். இவர் கடந்த ஜூலை 12, 2012 ஆம் ஆண்டு யூ.டியூப்பில் வெளியிட்ட தி கங்னம் ஸ்டைல் பாடல் உலக இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

இதனைத் தொடர்ந்து பல்வேறு பாப் பாடல்களை வெளியிட்ட பி.எஸ்.ஒய், தற்போது புதிய பாடல்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

இந்த நிலையில் சீனாவில் பி.எஸ்.ஒய் சென்ற பி.எம்.டபிள்யு. கார் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாப் பாடகர் பி.எஸ்.ஒய்க்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளன.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions