கருத்துக்கணிப்பில் பி.டி.செல்வக்குமாருக்கு வெற்றி - குவியும் இளைஞர்களின் ஆதரவு!

Bookmark and Share

கருத்துக்கணிப்பில் பி.டி.செல்வக்குமாருக்கு வெற்றி - குவியும் இளைஞர்களின் ஆதரவு!

ஜெமினி சினிமாவில் பொறுப்பாசிரியராக பணியாற்றி அதன்பின் சினிமா மக்கள் தொடர்பாளராக ரஜினி நடித்த படையப்பா, கமல் நடித்த தெனாலி, அஜித் நடித்த ஆழ்வார் முதல் சுமார் 150 படங்களுக்கு மேல் பணியாற்றி புகழ்பெற்றவர் பி.டி.செல்வக்குமார்.

குறிப்பாக இளையதளபதி விஜய்யின் வளர்ச்சியில் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எந்தளவு பங்கு இருக்கிறதோ அதேபோல் விஜய்யின் வளர்ச்சியில் பக்கபலமாக இருந்தவர் பி.டி.செல்வக்குமார். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பல படங்களில் பணியாற்றியுள்ள இவர், விஜய்யின் மக்கள் தொடர்பாளராக அவருடைய ஆரம்ப காலத்தில் இருந்தே பணியாற்றியுள்ளார்.

இவருடைய அபார உழைப்பையும் நேர்மையையும் பார்த்த விஜய், இவருக்கு புலி படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட வாய்ப்பை வழங்கினார். விஜய் மட்டுமல்லாது தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான தயாரிப்பாளர்கள் ஆர்.பி. சௌத்ரி, ஏ.வி.எம் பாலசுப்பிரமணியம், விஜயா புரொடக்ஷன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இவர் மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். இன்றும் விஜய்யுடன் குடும்ப நண்பரை போல ஒரு நல்ல உறவில் இருக்கிறார். 

காவலன், வாலு, வெடி என இன்னும் எண்ணிலடங்கா பல படங்களை இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து மீட்டு  திரைக்கு கொண்டுவந்ததில் இவருடைய பங்கு மிகமுக்கியமானது. வாலு படம் வெளியானது செல்வக்குமாரால்தான்  என டி.ஆரே பல மேடைகளில் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.

எப்போதும் பம்பரம் போல சுழன்றிக் கொண்டே இருக்கும் இவர், இம்மாதம் நடக்கவிருக்கும் தமிழ் திரைப்பட  தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் கே.ஆர். தலைமையிலான அணியில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். 
பதவியில் இல்லாத நேரத்திலேயே சின்ன படம் பெரிய படம் என பாகுபாடு பார்க்காமல் பல படங்கள் வெளிவர உதவியாக இருந்தவர் அதை துணைத்தலைவர் பதவியுடன் இதே நேர்மையோடு வருங்காலங்களிலும் தொடரவேண்டும் என்பதே பலரது எண்ணமாக உள்ளது. 

25 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக பணியாற்றியுள்ள இவர்மீது இதுவரை எந்தவித குற்றச்சாட்டும் எழுந்ததில்லை. எல்லோருடனும் நட்புறவில் இருக்கும் இவர், இந்த பதவிக்கு 100% தகுதியானவர் என்பதால் இவருக்கு அதிகளவில் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக இளைஞர்களின் ஆதரவு இவருக்கு பெருமளவில் பெருகியுள்ளது. 

மேலும் நடந்து முடிந்திருக்கும் கருத்துக்கணிப்பிலும் துணைத்தலைவர் பதவியில் இவர்தான் வெற்றிபெறுவார் எனவும் உறுதியான தகவல் கிடைத்துள்ளது.


Post your comment

Related News
பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே
தளபதி-62 கெட்டப்பில் விஜயின் காதில் கம்மல் - கசியும் ரகசியங்கள்.!
நீ பேசலாமா? என கேட்ட தளபதி ரசிகருக்கு பதிலடி கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்.!
எனக்கு பிடித்த நடிகர் இவர் தான், தல தளபதி எல்லாம்? - அனுஷ்கா ஓபன் டாக்.!
தளபதி விஜய், மெர்சல் படத்திற்கு தேசிய விருது கிடைக்கணுமா? - உடனே இதை செய்யுங்க ரசிகர்களே.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
தளபதி-62 படத்தில் அதுக்குள்ள இது முடிந்து விட்டதா? - பிரம்மிப்பில் ரசிகர்கள்.!
இன்று மாலை தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - தெறிக்க விட தயாரா?
வருட ஆரம்பமே மாபெரும் சாதனை படைத்த தளபதி - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!
இணையத்தில் ஒரே நேரத்தில் ட்ரெண்டான தல தளபதி - விஷயம் என்ன தெரியுமா?About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions