ஸ்ரீதேவி பற்றி புலி தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் இரங்கல்

Bookmark and Share

 ஸ்ரீதேவி பற்றி புலி தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் இரங்கல்

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினி , கமல் என அனைத்து முன்னணி  நட்சத்திரங்களுடன்  கதாநாயகியாக நடித்தவர் .தமிழில் 22 வருடங்களுக்கு மேல் நடிக்காமல் ஒதுங்கியிருந்த ஸ்ரீதேவி விஜய் நடிப்பில் புலி படத்தில் மீண்டும் நடிக்க வந்தார். அவரை பற்றி புலி தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் கூறும் போது :-

 நடிகை  ஸ்ரீதேவியின் இழப்பு தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இந்திய ரசிகர்களுக்கே பேரிழப்பு.  ஐம்பது ஆண்டுகள்  அவரது சினிமா பயணம் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் தெளிந்த நீரோடையாகவே இருந்தது.  சவாலான பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற துடிப்பு அவருக்குள் கடைசி வரை இருந்தது.புலி படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்த போது தென்னிந்திய மொழிகளில் ஸ்ரீதேவி நடிக்க மாட்டார் என்று பலரும் என்னை தடுத்தார்கள்.  

ஆனால் நான் முயற்சி செய்து பார்ப்போம் என்று மும்பை போய் பேசினேன் . உங்களின் தீவிர ரசிகன் மேடம் , நீங்கள் நடித்தால் எங்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கும் என்றதும், உடனே ஒப்புக்கொண்டார் . தென்னிந்தியாவில் விஜய் பெரிய சூப்பர்ஸ்டார், அவரது படங்கள் எனக்கு பிடிக்கும் என்று ஒத்துக்கொண்டார். 

சொன்ன நேரத்திற்கு சரியாக படப்பிடிப்புக்கு வருவதோடு மட்டுமல்லாமல் மேக்கப்,காஸ்ட்யூம் என அத்தனை விஷயங்களிலும் நேர்த்தியாக  இருக்கவேண்டும் என்று விரும்புவார். சென்னையில்  டி.டி.கே  சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அவர் கையால் சாப்பாடு போட்டு எங்களை உபசரித்ததை நினைத்து  பார்க்கும்  போது  ஆனந்தமாக இருக்கிறது .

தமிழில் இன்னும் நிறைய படங்களில் சவாலான பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருந்தது .  ஆனால் அவரது ஆசையை கடவுள் இவ்வளவு  சீக்கிரம் நிராசையாக்கி விட்டானே என்று எண்ணும்  போது  வேதனையாக உள்ளது.  ஸ்ரீதேவி போல் இன்னொரு கனவு  தேவதை தமிழுக்கு கிடைப்பாரா ?


Post your comment

Related News
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
Vijay 62 படத்தில் மேலும் ஒரு ஸ்பெஷல்!
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!
அந்த இடத்துல பிகினி போடாம அதையா அணிய முடியும்? - கவர்ச்சி பற்றி ஓபனாக பேசிய பிரபல நடிகை.!
சூப்பர் ஸ்டாருடன் அரசியலில் தளபதி விஜய்? - எஸ்.ஏ.சி பரபரப்பு பேட்டி.!
தளபதி-62 படத்தில் மேலும் இரண்டு நடிகர்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
தளபதி விஜய் ரசிகர்கள் செய்த நலத்திட்ட உதவிகள் !
தளபதி விஜயுடன் செல்ஃபீ எடுக்கணுமா? உடனே இதை செய்யுங்க - செம தகவல்.!
தன் மகள் விளையாடுவதை கூட்டத்தில் ஒருவராக ரசித்த விஜய் - வைரலாகும் புகைப்படம்.!
தளபதி-62 மரண மாஸ் கெட்டப்பில் விஜய், கசிந்தது போட்டோ - மெர்சலாக்கும் புகைப்படம்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions