அடுத்த ஆண்டு புதுப்பேட்டை-2!

Bookmark and Share

அடுத்த ஆண்டு புதுப்பேட்டை-2!

இரண்டாம் உலகம் படத்தை அடுத்து மீண்டும் தம்பி தனுசுடன் இணைய நினைத்தார் செல்வராகவன். ஆனால், தனுஷ், அந்த நேரத்தில் அனேகன், ஷமிதாப், மாரி, சூதாடி என பல படங்களில் கமிட்டாகியிருந்ததால் அவரால் கால்சீட் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதனால் தனது இயலாமையை அவர் தெரிவித்ததை அடுத்து சிம்பு பக்கம் திரும்பிய செல்வராகவன், அப்போதே அவருடன் தான் இணையப்போவதை அறிவித்தார். ஆனால் எதிர்பார்த்தபடி படத்தை தயாரிக்க நிறுவனம் கிடைக்காததால் அந்த முயற்சி தள்ளிப்போனது.

அந்த இடைவெளியில்தான் இது நம்ம ஆளு படத்தை முடித்தார் சிம்பு. ஆக, இப்போது செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி விட்டார் சிம்பு. அப்படியென்றால் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் எப்போது நடிப்பார்? என்று கேட்டால், தற்போது மாரி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் தனுஷ், அதற்கடுத்து சூதாடி மட்டுமின்றி, வேலையில்லாத பட்டதாரி வேல்ராஜ் இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.

அந்த வகையில், இந்த ஆண்டு முழுக்க அவர் பிசிதான் அதனால் இந்த மூன்று படங்களையும் முடித்த பிறகு புதுப்பேட்டை 2 வுக்காக மீண்டும் செல்வராகவனுடன் அவர் இணைவார் என்கிறார்கள். ஆக, அடுத்த ஆண்டுதான் புதுப்பேட்டை-2 தொடங்கும் என்று தெரிகிறது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions